Header Ads



காதலர் தினத்தில் இப்படியும் நடந்தது

காதலர் தினத்தில் காதலி ஏமாற்றியதால் மனமுடைந்த காதலன் காதலியின் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவிசாவளையில் இடம்பெற்றுள்ளது.
தெரணியகலையைச் சேர்ந்த 24 வயது இளைஞனே இவ்வாறு மரணமானார் என பொலிஸார் தெரிவித்தனர்.

காதலர் தினமான திங்கட்கிழமை மாலை தன்னை வந்து அவிசாவளை நகரில் சந்திக்குமாறு இந்த இளைஞனுக்கு அவரின் 20 வயதுக் காதலி எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் கொடுத்திருந்தார். அதன்படி காதலனும் நல்ல உடையணிந்து பரிசுப்பொருளுடன் தனது காதலியைச் சந்திப்பதற்காக அவிசாவளை நகருக்குச் சென்றார்.

வழமையாக இருவரும் சந்திக்கும் இடத்தில் நீண்ட நேரமாக அவர் காத்து நின்றார்.ஆனால் காதலி வரவில்லை.பின்னர் நகரின் சில இடங்களிலும் காதலியைத் தேடியும் காதலியைக் காணாது ஆத்திரமடைந்து நஞ்சு மருந்துடன் காதலி வீட்டுக்குச் சென்றார்.

காதலியை அழைத்து ஏன் அவிசாவளை நகருக்கு வரவில்லை என்றும் நீண்ட நேரமாக காத்திருந்து ஏமாந்துவிட்டேன் என்றும் கூறினார்.தான் பகிடியாக வரும்படி எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் அதனை நம்பி ஏமாந்து விட்டீர்கள் என்றும் கூறி காதலி சிரித்தாள். உடனே காதலன் தனது பொக்கற்றில் இருந்த நஞ்சு மருந்தை மளமளவெனக் குடித்துவிட்டார்.

காதலியால் அதனைத்தடுக்கவும் முடியவில்லை. உடனடியாக அவரை அவிசாவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சையளித்த போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் குறித்து அவிசாவளைப் பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்

No comments

Powered by Blogger.