Header Ads



தேர்தல் பிரசாரத்திற்காக ரணில் யாழ்ப்பாணம் செல்கிறார்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை காரைநகரில் இடம்பெறவுள்ளது.

கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய,கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளனர்.

மகேஸ்வரன் அமுதசுரபி மண்டபத்தில் முதலாவது பிரசாரக் கூட்டம் நடைபெறும். பின்னர் காரைநகரிலுள்ள திருமதி விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.யின் வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெறும். உள்ளூராட்சி  தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வார்களென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.