யாழ்ப்பாணத்தில 106 இந்திய மீனவர்கள் கைது
யாழ்.வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 106 இந்திய மீனவர்கள் இப்படகுகளிலிருந்து கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சியில் இந்தப் படகுகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள இந்திய மீன்பிடிப் படகுகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்றைய தினம் உள்ளுர் மீனவர்கள் இந்திய மீனவப் படகுகளை சுற்றிவளைத்துள்ளனர்.
கரைக்கு கொண்டு வரப்பட்ட மீனவர்கள் தற்போது பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment