இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை எதிர்கால அனர்த்தத்திற்கு வழிவகுக்கும்
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்படுகின்றமை எதிர்காலத்தில் பாரிய அனர்த்தத்திற்கு வழிவகுக்குமென விஜித ஹேரத் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உறுதியான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வரவில்லை. அதன் மற்றுமொரு அனுபவமே வடக்கில் நேற்று நடந்துள்ளது. இன்றும் இது குறித்து அரச தரப்பு இந்தியாவுடன் பேசி இருதரப்பு ஒத்துழைப்புக்கு வரவவில்லை. எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளது.
இந்த நிலையில் மீனவர் பிரச்சினை பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடும். இது அநாவசியமான பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு தற்போதும் தமிழ்நாட்டில் பாரிய ஆர்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
அதனால் இது சாதாரண பிரச்சினை இல்லை. இது குறித்து உடனடியாக உறுதியான தீர்விற்குச் செல்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றார்.

Post a Comment