Header Ads



அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுங்கள் யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க. அழைப்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு சரியான பாடம் புகட்டவேண்டுமென ஐக்கிய தேசி யக் கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் களுக்கான பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜெயசூரிய தலைமையில் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன, சுவாமிநாதன், திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.

இதன்போதே செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் விடுதலைக்காக போராடிய சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், சித்திலெப்பே ஆகி யோர் இன, மத பேதமின்றி அனைவரினதும் ஒற்றுமைக்காக உழைத்தவர்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஐக்கிய தேசியக் கட்சி குட்டி அரசாங்கத்தை அமைப்பதுதான் குறிக்கோள். இவ்வாறு பிரதேச சபையில் ஆரம்பித்து நகரசபை, மாநகரசபை, மாகாண சபை, நாடாளுமன்றம் என அதிகாரத்தைப் பலப்படுத்தி சர்வதேச மட்டத்தில் இலங்கையின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம்.

எமக்கு இரத்தம் தேவை என்றபோது தமிழ் இரத்தம், முஸ்லிம் இரத்தம் எனப் பார்ப்பதில் லை. எனவே சிறுபான்மை மக்கள் என்ற பாகு பாடில்லை.இன ஒற்றுமைக்காக சகல இனங்களி லும் தலைவர்களை உருவாக்கி ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் சக்தி மிக்க அரசை அமைக்கும்.

இச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த பல வருடங்களின் பின் வடக்கில் உள் ளூராட்சிச்சபை தேர்தல் நடைபெறவுள்ளது. யுத்தத்தின்பின் பல அபிவிருத்தி வேலைகள் மந்தகதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்வு செய்வதன் மூலம் அபி விருத்திப் பணிகள் விரைவாக முன்னெடுத்துச் செல்லும் அதி காரம் ஜனநாயக ரீதியில் கிடைக்கும். அபிவிருத்திக்கான சட்டங்களை இயற்றும் உரிமை உள்ளூராட்சி சபைகள் மூலம் கிடைப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் என்றார்

No comments

Powered by Blogger.