இந்தியாவுக்கு அடிபணிந்தது மஹிந்த அரசாங்கம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 136 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் யாழ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்படுவர் என முன்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment