இலங்கை பெண்களுக்கு எதிராக சவூதி அரேபியாவில் அக்கிரமம்
சவுதி அரேபியாவில் தான் பணிபுரிந்த வீட்டு உரிமையாளரின் காம சுகத்தை நிறைவேற்ற மறுத்த இலங்கை வீட்டுப்பணிப் பெண்ணின் உடலில் ஆணி ஏற்றபட்ட மனித குலத்துக்கு கேடு விளைவிக்கும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரது உடலில் ஆணிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிகிச்சைகளின் மூலம் காலி கராபிட்டிய வைத்தியசாலை வைத்தியர்களால் சிகிச்சைகள் மூலம் கம்பித்துண்டொன்று அகற்றப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்று ஆணிகள் உடலினுள் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சவுதி அரேபியாவில் தான் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களான தம்பதியினர் தன்மீது ஆணியேற்றியதாக குறித்த பெண் காலி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
Post a Comment