மஹிந்தவை மிரட்டுங்கள் - ஜெயலலிதா
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த, இப்பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்திய மீனவர்களுக்கு எதிரான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால், கடுமையான விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் பேசி, நேரடியாக எச்சரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைக் கடற்படையின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் காரணமாக இதுவரை சுமார் 540 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 15 நாள்களுக்கு முன்பு கூட ஒரு மீனவரின் உயிரை இலங்கை கடற்படை பலிவாங்கியது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் மூலம் இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. எனினும், ஒரு வார காலத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
16.2.2011 அன்று மீண்டும் இந்திய மீன்பிடி படகுகளை தாக்கி, அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, 24 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது.
முதல்வர் கருணாநிதியால் அனுப்பப்படும் கடிதங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டு கொள்வதில்லை என்பது வரிசையாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது தெளிவாகிறது.
எனவே, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் கடல் எல்லையை தனது முந்தைய நிலைக்கு எடுத்துவரும் வகையில், இந்திய வரைபடத்தில் கச்சத் தீவை மீண்டும் சேர்க்க வேண்டும். எனவே, இலங்கை அரசுடனான கச்சத்தீவு உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment