ஹம்பாந்தோட்டையில் கிரிக்கெட் டிக்கெட் விற்பனையில் குழப்பம்
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச் சீட்டு விற்பனையின்போது ரசிகர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹம்பாந்தோட்டையில் இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கனடா அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டு இன்று விநியோகிக்கப்படுகிறது.
அனைத்துப் போட்டிகளுக்குமான நுழைவுச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி பெருந்திரளான ரசிகர்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு முன்பாக இன்று கூடியிருந்தனர்.
அதன்போது தங்களுக்கான நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படாததைக் கண்டித்து அவர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். அதன் பின்னர் நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.
Post a Comment