யாழ்ப்பாணத்தில் கைதான மீனவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் அர்ப்பாட்டம்
இந்தியா மீனவர்கள் கைது செய்யப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, காரைக்கால் மீனவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருவதுடன், இலங்கை தூதரகத்தின் முன் திராவிட முன்னேற்ற கழகத்தினர் இன்று போராட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
யாழ்.வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு 106 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் கரைக்கு அழைத்துவரப்பட்டதை அடுத்து பருத்தித்துறை பொலிஸார் அவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment