Header Ads



யாழ்நகரில் நடைபாதை வியாபாரிகளுக்கு தடை

யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் சகல நடைபாதை வியாபாரிகளும் அகற்றப்படுவார்கள் என பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சித் திறன் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் யாழ்ப்பாண நகரின் நடைபாதைகளில் பழ வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு யாழ். மாநகர சபை அமைத்துக் கொடுத்த கடைகளை கையளிக்கும் வைபவத்திலேயே இதனைத் தெரிவித்தார்.

நகரை அழகாக வைத்திருப்பது எமது மக்களின் கடமையாகும். அதற்காக யாழ். மாநகர சபை முடிந்தளவு நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகளை அமைத்துக் கொடுத்துவருவது பாராட்டப்பட வேண்டியது என்றார்.

No comments

Powered by Blogger.