2 ஆண்டுகளில் போதைப் பொருட்களுடன் தொடர்புடைய 574,000 நபர்கள் கைது
கடந்த இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 574,000 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நிகவெரட்டியவில் இன்று (11) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இந்த நடவடிக்கைகளின் பலனாக சட்டவிரோத கடத்தல்காரர்கள் சிறையிலடைக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் மற்றும் மக்களின் உயிரைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக, குற்றவாளிகளிடம் சட்டவிரோதமாக இருந்த 3,980 துப்பாக்கிகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Post a Comment