Header Ads



மன்னார் 50 MW HayWind மின் உற்பத்தி, இறுதித் தொகுதி காற்றாடிகளும் வந்தன



மன்னார் 50 MW HayWind மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான இறுதித் தொகுதி காற்றாடிகள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.


இங்கு ஒரு யூனிட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக 0.0465 அமெரிக்க டாலர் (இலங்கை ரூபா 14.37) உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், இது நாட்டின் வரலாற்றில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு வழங்கப்படும் மிகக் குறைந்த விலையாக பதிவாகியுள்ளது.


மின் உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததும் எரிபொருள் இறக்குமதி குறைக்கப்படுவதால், ஆண்டுக்கு சுமார் 4.7 பில்லியன் ரூபா அளவிலான வெளிநாட்டு நாணயத்தை நாட்டிற்குச் சேமிக்க இந்தத் திட்டத்தின் மூலம் வாய்ப்பு ஏற்படும்.  2027 மார்ச் மாதத்திற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்து, 50 MW கொள்ளளவு கொண்ட மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.