Header Ads



வீசப்பட்ட குழந்தையை தத்தெடுக்க விரும்பும் 1000 பேர்


குருநாகல், மாவதகம, பரகஹதெனியவில் வயலில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இரண்டு நாள் பெண் குழந்தையை தத்தெடுக்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இதுவரையில் 1,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் பல அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 குழந்தையை தத்தெடுப்பது குறித்து விசாரித்த அனைவருக்கும் தத்தெடுப்பு செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிலையில், குழந்தையின் தாய், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.