தற்போதைய அரசாங்கம் இடது பக்கம் சிக்னல் போட்டு, வலது பக்கமாக சென்று கொண்டு இருக்கிறது
தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் இடது பக்கம் சிக்னல் போட்டு, தற்போது வலது பக்கமாக சென்று கொண்டு, எத்தகைய கலந்துரையாடல்களையும் நடத்ததாது பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் கட்டமைப்பு சார் மாற்றமொன்றை மேற்கொள்வதாக இருந்தால், வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். என்றாலும், எந்த பேச்சுவார்த்தைகளும் இணக்கப்பாடுகளும் எட்டப்படாமல் இதனை முன்னெடுக்க விளைவதன் காரணமாக இந்த முயற்சி தொடர்பில் பல சந்தேகங்கள் எழுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுடன் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment