Header Ads



அமைச்சர் சந்திரசேகரும், ஏனைய அரசியல்வாதிகளும் விரட்டியடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா


விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினரையும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.


செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் 3ஆவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினரான றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ். மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் ஆகியோரையும் அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றி இருந்தனர்.

No comments

Powered by Blogger.