Header Ads



நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - பெண்களின் ஆயுட்காலமும், பிறப்பு வீதமும் அதிகரிப்பு


நாட்டில் ஆண் மக்கள் தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார்.


1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறினார்.

No comments

Powered by Blogger.