Header Ads



லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு நாளை வரை கால அவகாசம் - நீதிமன்றம் அதிரடி


எரிவாயு கொள்கலனில் உள்ள எரிவாயு செறிவு மற்றும் அதனை கொள்கலன்களில் காட்சிபடுத்தக்கூடிய இயலுமை தொடர்பில் அறிவிப்பதற்காக லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு நாளை(15) வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களை மீளப்பெறுமாறு சிவில் செயற்பாட்டாளரான நாகாநந்த கொடிதுவக்குவினால் முன்வைக்கப்பட்ட நீதிப்பேராணை மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த கால அவகாசத்தை வழங்கியது. 

இந்த மனு ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய நீதியரசர்களடங்கிய ஆயத்தின் முன்னிலை எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதன்போது, நீதியரசர்கள் ஆயம், குறித்த எரிவாயு கொள்கலனில் உள்ள உள்ளடக்கத்தின் செறிமானம், அந்த செறிமானத்தை காட்சிப்படுத்தக்கூடிய இயலுமை, தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களை மீளப்பெறக்கூடிய இயலுமை தொடர்பிலும் வினவியிருந்தது. 

இதன்போது, லிட்ரோ கேஸ் நிறுவனம் சார்பில் முன்னிலையாகியிருந்த, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஸ அமரசூரிய, தமது சேவைப்பெறுநரிடம் இதுதொடர்பில் கேட்டறிந்து விடயங்களை சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு மன்றைக் கோரியிருந்தார்.

No comments

Powered by Blogger.