Header Ads



300 முஸ்லிம்ககளை பலிக்­க­டா­வாக்கப் போகி­றீர்களா? தமிழ்களிடத்திலும் இஸ்­லா­மோ­போ­பி­யாவை காண முடி­கி­றது - சாணக்­கியன்


உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து எது­வித குற்­றச்­சாட்­டுக்­க­ளு­மின்றி கைது செய்­யப்­பட்­டுள்ள 300 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் அர­சியல் கைதிகள் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தில் உள்ள எவரும் வாய்­தி­றக்­காமை கவ­லை­ய­ளிக்­கி­றது என மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா.சாணக்­கியன் தெரி­வித்தார்.

கன­டா­வுக்கு விஜயம் செய்­துள்ள அவ­ருக்கு, கடந்த 24ஆம் திகதி அங்கு வாழும் இலங்கை முஸ்­லிம்­களால் அளிக்­கப்­பட்ட வர­வேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் உட்­பட பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் சாணக்­கியன் எம்.பி. தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

அண்­மையில் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த தாய்­மார்கள் குழு­வொன்று என்னை வந்து சந்­தித்­தார்கள். கைது செய்­யப்­பட்­டுள்ள தமது குடும்ப உறுப்­பி­னர்கள் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தில் உள்ள அமைப்­புகள் மௌனம் காப்­பது தொடர்பில் அவர்கள் தமது கவ­லை­களை என்­னிடம் தெரி­வித்­தார்கள். இது வரை ஒரு அமைப்­பு­கூட அவர்­க­ளது விடு­த­லைக்­காக வீதியில் இறங்கி குரல் கொடுக்­கவோ, அறிக்கை ஒன்றைக் கூட வெளி­யி­டவோ இல்லை என அவர்கள் சுட்­டிக்­காட்­டி­னார்கள். முஸ்லிம் பெண்­க­ளா­கிய எங்­களால் வீதியில் இறங்கிப் போராட முடி­யாது, அப்­படிச் செய்தால் எங்­களை சமூகம் பிழை­யாகப் பார்க்கும் என்­ப­தையும் அவர்கள் எனக்கு விளக்­கி­னார்கள்.

இந்த 300 பேரையும் முஸ்லிம் சமூகம் பலிக்­க­டா­வாக்கப் போகி­றதா என நான் கேட்க விரும்­பு­கிறேன். தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காக நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரு­கிறோம். தொடர்ந்தும் அதற்­காக நாம் முன்­னிற்போம்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை விடுங்கள். அவர்கள் ஒரு­போதும் குரல் கொடுக்­க­மாட்­டார்கள். தௌபீக் எம்.பி.யின் வீட்டின் மீது மக்கள் ஏன் தாக்­குதல் நடத்­தி­னார்கள். அவர்கள் மீது உள்ள அதி­ருப்­தியின் வெளிப்­பாடே அது.

ஆகக் குறைந்­தது, இந்த 300 பேரையும் விடு­வி­யுங்கள், வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கிறோம் என்­றா­வது அதனை ஆத­ரித்து முஸ்லிம் எம்.பி.க்கள் அர­சுக்கு நிபந்­தனை விதித்­தி­ருக்­கலாம். அதனைக் கூட அவர்கள் செய்­ய­வில்லை.

இந்த முஸ்லிம் அர­சியல் கைதிகள் பிழை செய்­தி­ருந்தால் உட­ன­டி­யாக அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்­யுங்கள் என்றே நாம் கூறு­கிறோம். குற்­ற­மற்­ற­வர்கள் என்றால் தொடர்ந்தும் தடுத்து வைக்­காது உடன் விடு­வி­யுங்கள். 31 மாதங்­க­ளாக இவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஆனால் இவர்­க­ளது விடு­தலை தொடர்பில் இது­வரை ஒரு முஸ்லிம் அமைப்பு கூட வீதியில் இறங்கிப் போரா­ட வில்லை என்­பது கவலை தரு­கி­றது.

வடக்குக் கிழக்கில் வாழும் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் தமிழ் பேசும் சமூ­கங்­க­ளாக ஒற்­று­மைப்­ப­டாத வரை அங்­குள்ள சவால்­களை எம்மால் வெற்றி கொள்ள முடி­யாது. இந்த ஒற்­று­மை­யில்தான் எமது எதிர்­கா­லமே தங்­கி­யுள்­ளது.

இன்று தமிழ்கள் மத்­தி­யிலும் இஸ்­லா­மோ­போ­பி­யாவின் தாக்­கத்தை காண முடி­கி­றது. படித்த வைத்­தி­யர்கள் கூட முஸ்லிம் வைத்­தி­யர்­களால் தமது தொழி­லுக்கு ஆபத்து வரலாம் என வெளிப்­ப­டை­யாகக் கூறு­கின்ற நிலைமை தோன்­றி­யுள்­ளது. இது இஸ்­லா­மோ­போ­பி­யாவின் விளை­வுதான். இவ்­வா­றான சந்­தே­கங்­களைப் போக்க நாம் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்டும்.

என்னைப் பொறுத்­த­வ­ரையில் நான் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற வகையில், அனைத்து சமூ­கங்­க­ளுக்­கா­கவும் குரல் கொடுக்கும் ஒரு­வ­ரா­கவே என்னைப் பார்க்­கின்றேன்.

சில இஸ்­லா­மிய அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் சாணக்­கியன் ஏன் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னையைப் பேச வேண்டும் என்ற கேள்வி உள்­ளது. எங்­க­ளுக்­காக ஏன் பேசு­கின்றார் என அவர்கள் கேட்­கலாம். எனினும் நான் அனைத்து மக்­க­ளது பிரச்­ச­னை­க­ளுக்­கா­க­வுமே குரல் கொடு­கின்றேன்.

இஸ்­லா­மிய சகோ­த­ரர்கள் மத்­தி­யி­லேயே எனக்கு அதிக வர­வேற்பு உள்­ளதை நான் அறிவேன். தமிழ் மக்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் போது அவர்கள் எங்­களை பாராட்­டு­வ­தனை விடவும், இஸ்­லா­மி­யர்­க­ளு­டைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றது. எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர், நாங்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூறினார். அது உண்மைதான். எனினும் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை என்றார்.

இந் நிகழ்வில் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். – Vidivelli

1 comment:

  1. இவர்களின் விடுதலை முக்கிய விஷயம் அதேசமயம் இந்த ஏப்ரல் 21 தாக்குதல் இனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றி பேச முஸ்லிம் எவனுக்கும் துணிவு வராதது ஏன்?

    ReplyDelete

Powered by Blogger.