Header Ads



பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது, குறைக்கத் தெரிந்தவர்கள் இருந்தால் அம்முறையை எமக்கு கற்றுத் தரவும்


பொருட்களின் விலையைக் குறைக்கத் தெரிந்தவர்கள் இருந்தால் அந்த முறையை எங்களுக்கு கற்றுக் கொடுக்கவும் என துறைமுகம் மற்றும் கப்பல் துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளால் பொருட்களின் விலை நிர்ணயிக் கப்படுவதால், உலகில் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் பொருட்களின் விலையைக் குறைப்பதற்குச் சாத்தியமில்லை என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் பொருட்களின் விலையை எப்படிக் குறைப்பது என்று தெரிந்த பொருளியல் நிபுணர் ஒருவர் இருந்தால், அந்த முறையை தனக்கு சொல்லித் தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எரிபொருள், எரிவாயு மற்றும் பால் மா போன்ற பொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுவது நம் நாட்டில் அல்ல, சர்வதேசச் சந்தையால் தான் நிர் ணயிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பொருட்களின் விலைகள் உலக நாடுகளில் உயரும் போது, ​​இலங்கையிலும் பொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரிப்பது  இயல்பானது என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அவர் பதில் வழங்கியுள்ளார்.

4 comments:

  1. தெரியாவிட்டால் ராஜினாமா பண்ணினாள் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதே நடக்கும்

    ReplyDelete
  2. தெரியாவிட்டால் ராஜினாமா பண்ணினாள் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதே நடக்கும்

    ReplyDelete
  3. Please resign your job we can't teach you

    ReplyDelete

Powered by Blogger.