Header Ads



அவர் வருவாரா..?


இலங்கையின் அரசியல் குடும்பமொன்றை சேர்ந்த நன்கு கல்விகற்ற இளைஞர் ஒருவரை பரந்துபட்ட அரசியல் கூட்டணி மூலம் அரசியலிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த இளைஞர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்தியா என்பதை உறுதி செய்ய குமார வெல்கம மறுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான கூட்டணி உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து அரசியல் கட்சிகள் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மிகச்சிறந்த தலைவர் ஒருவர் வரவுள்ளார்,நாங்கள் உருவாக்கவுள்ள இந்த கூட்டணி மூலம் நன்கறியப்பட்ட அரசியல் குடும்பத்தை சேர்ந்த கல்விகற்ற இளைஞர் ஒருவரை நாங்கள் அரசியலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.”

அவர் குறிப்பிட்டது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகனையா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியவேளை அது எதிர்காலத்தில் தெரியவரும் என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இலங்கை முஸ்லிம் களின் பொற்காலமும் முடிவுற்றது சந்திரிகா அம்மையார் இன் அரசாங்கமும் முடிவுக்கு வந்தது அது ஒரு பெரும் பொற்காலம். இடையில் ரனில் குழிதோண்டி அஷ்ரப் ஐ இல்லாமல் செய்ததுடன் முழு இலங்கைக்கும் சாபம் பிடிக்க தொடங்கியது.

    ReplyDelete
  2. இது மன்னராட்சி அல்ல சந்திரிகா என்ன பெரிய திறமைசாலியா ; சந்திரிகா சொன்னதெல்லாம் பொய் அந்த பேச்சில் மயங்கி வாக்கு போட்டோம் , ஸ்ரீமா செய்த கொடுமை மறக்க முடியுமா ? தள்ளாத வயதிலும் பிரதமர் பதவி தேவையா ? மக்களை ஏமாற்றி காலம் கடத்தினார் அனுரா இந்த குடும்பம் தான் என்ன திறமை இருந்தது அது ஒரு செல்ல கிறுக்கு இனியாவது ஸ்ரீமா குடும்ப ஆட்சி அடிமை படுவது போதும் ,
    அஷ்ரபின் மரணம் ஒரு சதி , நாட்டில் தலைவருக்கா பஞ்சம் / வெல்கம ஒருகாலத்தில் மஹிந்தவின் இடிபுடியாக இருந்ததை ,பழைய பேச்சை கேட்டால் புரியும்

    ReplyDelete

Powered by Blogger.