Header Ads



மோட்டார் சைக்கிளில் வந்தவர் தயாசிறி மீது மோதினார், பொலிஸார் ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை - சுதந்திரக் கட்சிக்கு சந்தேகம்


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுசெயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறிஜெயசேகர தொடர்பான விபத்து சம்பவம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக  கொழும்பு கசட் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாலையில் கொழும்பு சென்பிரிஜட் கொன்வன்டிற்கு அருகில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை  அமைச்சர் சிறிய விபத்தில் சிக்குண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், அமைச்சரின் மீது மோதியதை தொடர்ந்து இராஜங்க அமைச்சருக்கு தலையிலும் கையிலும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.இதன் பின்னர் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை உறுதி செய்வதற்கு சிசிடிவி கமராக்கள் எதுவும் அந்த பகுதியில் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இராஜாங்க அமைச்சர் தொடர்புபட்ட விபத்து குறித்து பொலிஸார் ஏன் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன என கொழும்பு கசட் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றனவா என்பது தெரியவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.