Header Ads



குர்ஆனை கையினால் எழுதும் திறன்பெற்றவரின், பேனா எழுத மறுத்த போது..?


ஷேக் உத்மான் தாஹா குர்ஆனை கையில் எழுதும் திறன்பெற்ற, பிரபல சிரிய நாட்டு காலிகிராஃபர் எனும் எழுத்தோவியர் ஆவார்.

மதீனாவில் இயங்கி வரும் மன்னர் ஃபஹத் புனித குர் ஆன் பதிப்பகத்தில் 18 ஆண்டுகள் திருமறை குர் ஆனை எழுதும் பணியில் அமர்த்தியது சவூதி அரேபிய அரசு.

அவரது கையால் எழுதப்பட்ட மூல பதிப்பை பிரதி எடுத்து உலகளவில் 200 மில்லியனுக்கும் அதிகமான குர் ஆன் பிரதிகள் சவூதி அரசால் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

ஷைக் கூறுகையில்,"36 ஆண்டுகளில் நான் முழு குர்ஆனையும் 12 முறை எழுதியுள்ளேன் - எந்த ஒரு பக்கத்திலும் யாரும் தவறு காணவில்லை, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ஒவ்வொரு பக்கமும் உலகம் முழுவதிலுமுள்ள நிபுணர் அறிஞர்கள் குழுவால் சோதிக்கப்பட்ட பின்பே வெளியிடப்படும் அல் ஹம்துலில்லாஹ்" என்றார். 

வான்மறை குர்ஆனுக்கு சேவை செய்வதற்காக அல்லாஹ் உன்னைப் படைத்து இருக்கிறான் போலும் என்று என்னுடைய நண்பர்கள் தன்னிடம் கூறுவார்கள் என்றார் ஷேக் உத்மான்.

ஷேக் உத்மான் தாஹா அவர்கள் தொடர்ந்து சொன்னார், அவர் ஒரு முறை குர்ஆனை எழுத அலுவலகத்திற்கு வந்ததாக கூறினார். அவர் தனது பேனாவை எடுத்தார், ஆனால் அது எழுத மனம் வரவில்லை. அவர் தன்னுடன் அலுவலகத்தில் இருந்த அலுவலக உதவியாளரை அழைத்தார், அவர்கள் எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு மீண்டும் முயன்றனர், ஆனால் எழுத மனம் வரவில்லை. ஷேக் கூறினார், 'அதிகாலை பஜர் தொழுகைக்கு பிறகு நான் ஒரு புதிதாக உளு எனும் அங்க சுத்தி செய்யவில்லை என்பதை உணர்ந்தேன், அதனால் நான் என் வுதுவை புதுப்பித்து, பேனாவை எடுத்தேன், அது இறைவன் நாடிய வரை எழுதி முடித்தேன் என்றார்.

மேலும் அவர் கூறினார், 'வெவ்வேறு நாடுகளில் ஓவியம் வரைவதற்கு எனக்கு மில்லியன் கணக்கான தொகை கொடுக்க முன் வந்த போதிலும், அந்த வாய்ப்புகளை திடமாக மறுத்து விட்டேன். எனது திறமைகளை திருமறை குர் ஆன் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் என்று ஒரு அறிஞராக இருந்த, எனது தந்தையிடமிருந்து சத்தியம் செய்ததால் நான் மறுத்துவிட்டேன். நான் சத்தியம் செய்த நாளிலிருந்து, நான் எந்த ஓவியத்தையும் வரையவில்லை. எனக்கு இறைவன் கொடுத்த கலை / திறமை மூலம் நான் குர் ஆனுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன். நான் பணத்தையோ புகழையோ விரும்பவில்லை. அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நான் விரும்புகிறேன் என்றார் ஷேக் உத்மான் தாஹா.

முழு குர்ஆனை ஒரு முறை எழுதி முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படும். பின்னர் எழுதியதை சரி பார்க்க அறிஞர்கள் குழு ஓராண்டு எடுத்துக் கொள்வார்கள்.

"ஷேக் 80 வயதைக் கடந்து விட்டதாகக் கூறினார், ஆனாலும் இன்றும் நேர்த்தியாக குர் ஆனை இறைவனின் கிருபையால் எழுத முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள் ஷேக் உத்மான் தாஹா.

 Jafer Sithik 

1 comment:

  1. May almighty Allah, give him & his family for good health and forgive all their sins.

    ReplyDelete

Powered by Blogger.