Header Ads



இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, கப்பல் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது


எம்.வி. எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் இடம்பெற்ற தீவிபத்து காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, அந்த கப்பலுக்கு சொந்தான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கேட்டுள்ளார்.

குறித்த கப்பல், கடந்த மே மாதம் 20ம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றியதுடன், இந்த தீயை கட்டுப்படுத்த 13 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியின்போது, இலங்கையின் கடற்பரப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்த  கப்பல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சாமுவெல் யோஸ்கொவிட்ஸ், இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதுடன், மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், கப்பலால் கடலுக்கு ஏற்பட்டுள்ள மாசினை அகற்றுவதற்கு தேவயான  உபகரணங்களை இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இலங்கையில் கரையோரங்களில் ஏற்பட்ட சுனாமி காரணமாக கரையோரங்களும் அங்கு வாழ்ந்த மக்களும் அப்படியே அழிந்து அவர்களின் வாழ்வாதாரங்களும் ஒரு சில நிமிடங்களில் அழிந்து நாசமாகிவிட்டன. அதுபோல சிங்கப்பூரின் கப்பல் மாலுமிகளின் நேர்மையற்ற தன்மை காரணமாக எமது நாட்டுக் கடல்பரப்பும் கரையோரங்களும் முற்றாக நாசமாகி விட்டன. எமது சுற்றச் சூழலில் உள்ள மீன்கள் கோடிக்கணக்கில் அழிந்து மீண்டும் அவை மீளஉருவாகும் என்ற நம்பிக்ைக முற்றாக இல்லாமல் ஆகியிருக்கின்றது. அதற்கு பொறுப்பானவர்களின் வெறும் மன்னிப்பு ஒருபோதும் பயனளிக்காது. அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்று சட்டத்தில் என்ன நட்டஈடு இருக்கின்றதோ அவை அனைத்தையும் முழமையாக செலுத்தி எமது மீனவர்கள் மீண்டும் தங்கள் தொழிலை செய்வதற்கு என்ன அவசியமோ அவை அனைத்தையும் உரிய அதிகாரிகள் அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க ஆவண செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.