Header Ads



துமிந்த சில்வா எப்படி விடுதலை செய்யப்பட்டார்..? சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பியுள்ள கேள்விகள்


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமை குறித்து  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கும்போது உரிய செயல்முறை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக  அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும்போது, விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் பரிந்துரைகளை பெறவேண்டுமென அந்த சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான சூழ்நிலைகள் மற்றும் மன்னிப்பு பெற அவர் எப்படி தகுதியானவர் என்பதற்கு சில்வா தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதேநேரம் குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட ஏனையவர்கள் தண்டனை அனுபவிக்கும் போது, துமிந்த சில்வாவை மாத்திரம் எவ்வாறு அதிலிருந்து காப்பாற்றுவது உள்ளிட்ட 06 கேள்விகளை அவர்கள் தொடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.