Header Ads



கப்பல் நிறுவனம் வழங்கும் நஷ்டஈட்டில் 3/2 பங்கை மீனவர்களுக்கு வழங்குக - நீர்கொழும்பிலிருந்து கோரிக்கை


- Ismathul Rahuman -

கடலில் தீ பற்றிய கப்பல் நிறுவனத்தினால் செலுத்தப்படும் நஷ்டஈட்டுத் தொகையில் 3/2 பங்கு பாதிற்கப்பட்ட மீனவ சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும். தொழிலை இழந்த மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் நிவாரணம் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை ஐக்கிய மீனவ தொழிற்சங்க தலைவரும், பிடிப்பன மீனவ சங்க தலைவருமான அருன ரொஷான் தெரிவித்தார்.

கப்பல் தீ பற்றிய அனர்தத்தினால் மீன்பிடி தொழிலை இழந்துள்ள மீனவர்களின் பெயர் விபரங்களை நீர்கொழும்பு மீன்பிடி கார்யாலய உதவி பணிப்பாளர் தினேஷிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அருன ரொஷான் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் 

தெரிவிக்கையில் கூடுதலாக மீன்கள் பிடிபடும் இக்காலப் பகுதியில் மீனவர்களுக்கு தொழிலுக்குச் செல்லமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளன. சிலர் இக்காலப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபா சம்பாதிக்கின்றனர். இக்காலத்தில் சம்பாதிப்பதைக்கொண்டு வருடாந்த செலவை ஈடுசெய்கிறோம்.திணமொன்றுக்கு மீனவர்கள் 10 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையான வருமானத்தை இழந்துள்ளனர்.

சிலர் திணமும் கடலுக்குச் செல்கின்றனர். சிலர் காலையில் சென்று மாலை வருகின்றனர். மற்றும் சிலர் மாலையில் சென்று அடுத்த நாள் காலையில் திறும்புகின்றனர்.இந்த அனர்தத்தினால் மக்கள் மீன் உண்பது குறைவடைந்துள்ளன. பயணத் கட்டுப்பாட்டினால் மீன் வியாபாரிகள் வருவதில் சங்கடம் ஏற்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்தாலும் விற்பனை செய்யமுடியாத நிலமை உள்ளது. இது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று சொல்லமுடியாது. அரசாங்கம் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 5000 ரூபா கொடுத்து எம்மை அகெளரவப்படுத்த வேண்டாம். ஒரு நாளைக்கு 4000 ரூபா வீதம் கொடுக்க வேண்டும்.

கப்பல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் எவ்வளவு நஷ்டஈடு கிடைக்குமென்று சொல்லமுடியாது. கிடைக்கும் நஷ்டஈட்டுத் தொகையில் 3/2 பங்கு மீனவ சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.