Header Ads



"கொரோனாவை கட்டுப்படுத்த எமது ஜனாதிபதி, சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கிறார்" - அமைச்சர் கெஹெலிய


தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லையென்றும், சர்வதேச பிரச்சினைகள் கரணமாக தடுப்பூசி செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளன என்றும் எவராவது குற்றஞ் சுமத்துவார்களாயின் அது பச்சைப் பொய்யென தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தடுப்பூசி விடயத்தில் 196 நாடுகளிடையே பாரிய போட்டித்தன்மை காணப்படுகின்றது.

இந்தத் தடுப்பூசிளை பல செல்வந்த நாடுகள் தமது தேவைக்கு அதிகமாகக் கொள்வனவு செய்துள்ளன. இதனால்தான் எமக்கு உடனடியாகக் கொள்வனவு செய்ய முடியாமல்போனது என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,“இராஜதந்திரம் மற்றும் நட்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பயன்படுத்தி, எமது ஜனாதிபதி ஏனைய நாடுகளின் அரச தலைவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகொண்டு, எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், எனவே  அடுத்த இரண்டொரு மாதங்களில் எமக்குத் தேவையான முழுமையான தடுப்பூசி கிடைக்கும்” என நம்பிக்கை வெளியிட்டார்.

“தடுப்பூசி செலுத்துவதே பிரதான தீர்வாகுமென அரசாங்கம் நம்புவதாகவும்  இத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதன் ஊடாக முழு நாட்டு  மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதுடன், உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசிகளை  குறிப்பிட்ட காலவரையறைக்குள் செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றோம்“ என்றார்.

மட்டுப்படுத்தப்பட்ட தடுப்பூசிகளே எம்மிடமுள்ளன. அதனைவைத்து, எம்மால்  நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளதால், தகுதியான, ஆபத்து பட்டியலில் அதிமுன்னிலையில் உள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது

எனத் தெரிவித்த அவர், 8ஆம் திகதி 2 மில்லியன் சினோஃபார்ம் இலங்கைக்கு வரவுள்ளன என்றார்.

No comments

Powered by Blogger.