Header Ads



பாராளுமன்றத்தை கூட்டாதிருக்க மகிந்த - சஜித் இணங்கியபோதும், ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் செயற்பட்டார்


எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

அதிகாரத்திற்காக மக்களின் உயிரை துச்சமாக மதித்து செயல்படும் நிலையை நாம் இன்று அனுபவித்துகொன்டிருகிறோம். கொவிட் தொற்று பரவல் நாடு  முழுவதும்  பரவி கட்டுப்படுத்த முடியாத நிலையை கடந்து  சென்று கொண்டிருக்கிறது என்பது யதார்த்தமே.

துறைமுக நகர ஆனணக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும் அரசாங்கத்திற்குள்ள  தேவையின் நிமித்தம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை கருத்திற்கொள்ளாது பாராளுமன்றத்தை ஒன்று கூட்டியதால் இன்று மக்கள் பிரதிநிதிகளும்,பாராளுமன்ற சேவையாலர்களும் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

பாராளுமன்றத்தின் சபை முதல்வரின் காரியாலயம் ,பொதுச்செயலாளறின் காரியாலயம்,பிரதி பொதுச்செயலாளரின் காரியாலய உறுப்பினர்களுக்கு தொற்று ஏட்பட்டு மூடப்பட்டு இருந்த நிலையில் சபாநாயகர் பாராளுமன்றத்தை ஒன்று கூட்ட நடவடிக்கை எடுத்தமை மிக அற்பமாக கருதியே.

பாராளுமன்றத்தை கூட்ட வேண்டாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,  பிரதமருடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்திருந்த நிலையில் ஆளும் கட்சியின் சபை முதல்வர் ,ஆளும்கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் சகல எதிர்க்கட்சிகளினதும் கோரிக்கைகளையும் தாண்டி தமது  தனிப்பட்ட அபிப்பிராயங்களின் பிரகாரம் முடிவெடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆளும் தரப்பின் இந் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப்பவே சபாநாயகர் அப்பொழுது செயற்ப்பட்டார்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் ஒரு தலைப்பட்சமாக சபாநாயகர் செயட்பட்டமை பாராளுமன்றத்தின் சுயாதீனத்திற்ககு சவால் விடுத்த வன்னமே.

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்  போது இதன் பாரதூரம் குறித்து என்னால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை சிரிதேனும் கவனத்திற்கொள்ளாமலும் ஒழுக்கவியலாகவும் இதற்கு செவிசாய்க்காமல் இருந்தது அரசாங்கம்.இந்த விடயங்களை கருதிற்கொள்ளும் பட்சத்தில் தற்போதைய நிலையை ஒரளவுக்கேனும்  கட்டுப்பாட்டிற்குல் கொன்டுவருவதற்கான வாய்ப்பு எற்ப்பட்டிருக்கும் அல்லவா? 

எதிர்க்கட்சித் தஙைவருக்கு  கொரோனா தொற்று எற்ப்பட்டமை பாராளுமன்றத்திற்கு வெளியே என்று கூறப்படுவது எந்த அடிப்படையில் என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும்.எதிர்க்கட்ச்சித் தலைவர் தொற்றுகுள்ளாவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே பாராளுமன்றத்திற்குல் சபாநாயகரின் பொதுச்செயலாளர் காரியாலயம் ,பிரதி செயலாளரின் காரியாலயம் உட்பட பாராளுமன்ற வளாகத்திற்குள் தொற்றாளர்கள்  இனம்காணப்பட்டிருந்தனர்.

அத்தகைய தொற்றுக்கள் ஏற்ப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் ஊடக சந்திப்புகளை நடத்தாத சபாநாயகர் தூக்கத்திலிருந்து திடீரென எழுந்தது போன்று தனது மனசாட்சி உருத்தல்களை மறைக்க முற்ப்படுவதாகவே இது அமைகிறது.

கொவிட் முதலாம் அலை தொடக்கம் அரசாங்கம் நடந்து கொண்டது மக்களின் பக்கம் அல்ல.

முதலாம் அலையின் போது அதன் சவால்களை முறியடிக்க பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சமர்ப்பித்த யோசனையை கிடப்பில் போட்ட அரசாங்கம் தற்போது பாராளுமன்றத்தைக் கூட்டியது தனது கஜமித்துரு அரசியலுக்காகவும்,கஜமிதுரு நண்பர்களின் பொருளதாரத்தை  கட்டியொழுப்பவே என்பது இக்காலத்தில் மேற்கொள்ளப்ப்பட்ட பெரிய துரோகமாகவே நாங்கள் இதை எதிர்க்கிறோம்.

எதிர்க்கட்சி தலைவருக்கும் அவரின் அலுவலர்களுக்கும் தொற்று எற்ப்பட்டது பாராளுமன்றத்துக்கு வெளியே என்று சபாநாயகர்  கூறுவது யாருடைய விஞ்ஞான உபதேசங்களின் பிரகாரம் என்பது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டுமென்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அதேபோல் இந்நேரத்தில் சகல பொறுப்புக்களையும் மக்கள் மீது சாட்டி மக்களை குற்றவாளியாக காட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசாங்கத்தின் பொறுப்புகளையும் கடமைகளையும் செய்வதன்பாலுல்ல தனது இயலாமை காரணமாக எற்ப்படும் ஒவ்வொரு உயிரிழப்புக்களுக்கும் அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

லக்ஷ்மன் கிரியெல்ல

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா.

No comments

Powered by Blogger.