Header Ads



அரசாங்கம் எடுக்கவுள்ள 5 அவசர நடவடிக்கைகள்


கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதனால், அரசாங்கம் அவசரமான நடவடிக்கைகள் சிலவற்றை எடுக்கவுள்ளது.

இதுதொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் முக்கியமான கலந்துரையாடல்கள் இன்று (10) இடம்பெற்றன.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல்களில், சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளையும் கலந்துகொண்டிருந்தார்.

அதிலொரு கலந்துரையாடலில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மீது ஆகக் கூடுதலான கவனம் செலுத்தி, கொரோனா தடுப்பூசியை ஏற்றவேண்டும்.

தற்போது முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளை, நாடளாவிய ரீதியில், மாவட்ட மட்டங்களில் முன்னெடுப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பி.சி.​ஆர். பரிசோதனைகளின் அறிக்கைகளை காலதாமதமின்றி, கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்,

பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுபவர்கள் முடிவு கிடைக்கும் வரையிலும் வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்.

சகல சிகிச்சை வசதிகளுக்கும் போதுமான ஒக்சிசன் வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மேலே கூறப்பட்ட ஐந்து விவகாரங்கள் தொடர்பிலேயே, இக்கலந்துரையாடல்களில் ஆகக் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது.

1 comment:

Powered by Blogger.