Header Ads



25 வயது ஹலிமாவுக்கு, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் (படங்கள்)


மாலி நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவர் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஸ்கேன் மூலம் அடையாளம் காணப்பட்டமையை விடவும் அதிகமாக இரண்டு குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.

கடந்த மாதம் மார்ச் 30 ஆம் திகதி ஹலிமா எனும் மேற்படி பெண், சிறந்த மருத்துவ மேற்பார்வை மற்றும் பாதுகாப்பான பிரசவத்துக்காக மாலி அரசாங்கத்தால் மொரோக்கோ நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இவர் 09 குழந்தைகளையும் நேற்று செவ்வாய்கிழமை (04)  மொரோக்கோவில் பெற்றெடுத்துள்ளார்.

சிசேரியன் மூலம் பிறந்த மேற்படி குழந்தைகளில் ஐவர் பெண்கள், நால்வர் ஆண்களாவர். குழந்தைகள் உடல்நலத்துடன் இருப்பதாக மாலி சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

ஹலிமாவின் இந்த பிரசவம் மாலியில் ஒரு பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது, அவர் ஏழு குழந்தைகளையே கர்ப்பம் தரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாலி தலைநகர் பமாகோ வில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் தங்கிய பின்னர், மார்ச் 30 அன்று ஹலிமாவை மொராக்கோவுக்கு அனுப்ப வைத்தியர்கள் முடிவு செய்திருந்தனர்.

மொராக்கோ வைத்தியசாலையில் ஐந்து வாரங்கள் தங்கிய பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் 09 குழந்தைகளைப் பிரசவித்தார்.  தாயும் குழந்தைகளும் சில வாரங்களில் வீடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 comments:

  1. மாஷாஅல்லாஹ், பாரகால்லாஹ்.

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ், பாரகால்லாஹ்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் தபாரக் அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  4. இது ஆச்சரியமா அல்லது அதிசயமா?

    ஒன்பது குழந்தைகள் ஒரு தாயின் வயிற்றில் ஒன்றாக 10 மாதங்கள் வாழ்ந்தது என்பது ஒரு வரலாற்று அதிசயமே.

    இறைவன் நாடினால் எதுவும்கூட நடக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று.

    ReplyDelete

Powered by Blogger.