Header Ads



கொரோனாவால் மரணித்த 202 பேரின், உடல்கள் இதுவரை ஓட்டமாவடியில் நல்லடக்கம்


இன்றுடன் 20.05.2021 எண்ணிக்கையின்படி, 202 சடலங்கள் ஒட்டமாவடி பகுதியில் அமைந்துள்ள  COVID-19ஆல் மரணிப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அடக்கஸ்தளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது..

333 நீண்ட நாட்களின், நீண்ட இரவுகளின் போராட்டத்திற்கு பிறகு , மார்ச் 5 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் விதித்திருந்த பலவந்த உடல் தகனம் என்ற தனது நிலைப்பாட்டை மாற்றி , கோவிட் 19 ஆல் இறப்பவர்களின் நல்லடக்கத்துக்கு விதித்திருந்த தடையை நீக்கியது .

தாராளமான விஞ்ஞான ரீதியான  ஆதாரங்கள் கூட , துயரம் தோய்ந்து பல சோகங்கள் நிறைந்த சம்பவங்களுடன் கதி கலங்கி நிர்க்கதியாக நிற்கும்  குடும்பங்களின் ஒரே ஆதங்கம் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில், அவர்களது அன்புக்குரியவர்களது இறுதிக் கடமையை கண்ணியமாக நிறைவேற்றுவதற்கு சாதகமாகவே இருந்த போதும் கூட , அரசாங்கமானது அறிவு பூர்வமற்று , அறியாமையோடும்தான் தொடர்ந்தும் இருந்து கொண்டு இருந்த சூழ்நிலையிலே அதிகரித்த அளப்பரிய அழுத்தங்களுக்கு தாங்கிப்பிடிக்க முடியாது இறுதியாக அரசு அடக்கம் செய்வதற்கு அடி பணிந்தது.

அடக்கம் செய்வதற்கான  தடை நீங்கியது  ஒரு பெரிய ஆறுதலை ஏற்படுத்திய போதிலும், அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளும், மற்றும் நடைமுறைகளும் மிகவும் சவாலானவையாகவும், மற்றும் முற்றிலும் தேவையற்றவையாகவுமே காணப்பட்டன . இறுதியாக அடக்கம் செய்வதற்காக வரண்ட ஒரு நிலப் பகுதியை அவர்களது நிபந்தனைகளுக்கு பொருத்தமானதாகவும் மிகவும் தொலைப்பிரதேசமாக கிழக்கு மாகாணத்தின்  ஒட்டமாவடியினை அடையாளம் கண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தங்களது அன்புக்குரியவர்களை இழந்து துக்கத்துடன்  இருக்கும் குடும்பங்கள், வைத்தியசாலையிலிருந்து  இறந்தவரது உடலை விடுவிப்பதற்கான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து, அதைத் தொடர்ந்து  போக்குவரத்து பயண ஏற்பாடுகளோடு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சவால்களை  சமாளித்தே சொல்லொண்ணா துயரங்களோடு கிழக்கு மாகாணத்திலுள்ள அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு வருகின்றனர்.

இவ்வாறான 202 குடும்பங்களில் பலருடன் தினம்தோறும் , இந்த இறுதிக்கடமைக்கான ஏற்பாடுகள் சம்பந்தமாக ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றும் வித்தியாசமான  சவால்களாகவும் சோதனைகளை முகம் கொடுக்கக்கூடியதாகவுமே காணப்படுகின்றன. 

சில காரியங்கள்  இலேசானதாக இல்லை,  மன நெகிழ்ச்சியால் கவலையுடன் கண்ணீரில் தோய்கின்ற பல நாட்களையும் , பல இரவுகளையும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்து கொன்டிருக்கிறோம் ,

பல நாடுகள் முன்னெச்சரிக்கையாக கடைப்பிடிக்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகளையும் , அதே வேளையில், பெரும்பாலான நாடுகள் இறந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த கண்ணியத்தையும் மரியாதையையும் வழங்குகின்ற முறைமைகளையும் , இலங்கையிலே வெறுமனே எவ்வித அடிப்படைகளும் இல்லாத கட்டுக்கதைகளை புனைந்தெடுத்து , இனவாதம் மற்றும் அரசியல்வாதங்களை முன்வைத்து எம்மவர்களை மேலும் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு இவ்வரசு ஆக்கிக் கொண்டிருப்பது மிகவும் அபத்தமானது.

இதுவரை  நல் அடக்கம் செய்யப்பட்ட  202 மண்ணறையில் வாழ்கின்றவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுடன் என்றும் எனது பிரார்த்தனைகள் உள்ளன, அதே நேரத்தில்  என் எண்ண அலைகள் எப்போதும் அந்த 333 நாட்களிலே அன்புக்குரியவர்களை கண்ணியமான முறையிலே வழி அனுப்பி வைக்க முடியாத துயரத்தில் பாதிக்கப்பட்ட அந்த நூற்றுக்கணக்கான  குடும்பங்களின் துயரத்துடன் தொடர்கின்றது.

Seyed Ali Zahir Moulana

2 comments:

  1. This sad period can never be forgotten...
    May Allah accept your endeavours in this matter
    It is indeed was a sad chapter in the life of Muslims in Sri Lanka

    ReplyDelete
  2. not only never forget but also should teach a good lesson to them in upcoming elections including Muslim MPs those whom supported 20th amendment.

    ReplyDelete

Powered by Blogger.