Header Ads



கத்தாரின் பள்ளிவாசல்களில் இம்முறை, தராவீஹ் தொழுகை நடைபெறாது – அவ்காப் அறிவிப்பு


- CWF QATAR -

கத்தாரின் பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை நடைபெறாது என்பதாக இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (அவ்காப்) அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டுக்கான புனித ரமழான் மாதம் இன்று கத்தாரில் ஆரம்பிக்கும் நிலையில் கொரோனா நிலையைமை கருத்திற் கொண்டு தராவீஹ் தொழுகை, பள்ளிவாசல்களில் நடத்தப்படமாட்டாது என்பதாக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிவாசல்களின் முகாமைத்துவ திணைக்களம் பள்ளிவாசல்களில் கடமைபுரியும், இமாம்கள், மற்றும் அமுத்தின்மார்களுக்காக வெளியிட்ட விஷேட சுற்று நிரூபத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுற்று நிரூபத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதான் சொல்லப்பட்டு 5 நிமிடங்களில் தொழுகை நடத்தப்படல் வேண்டும்.

தொழுகை நிறைவடைந்து 5 நிமிடங்களில் பள்ளிவாசல்கள் மூடப்படவேண்டும்

தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு சமூகம் தருபவர்கள் கொரோனா பரவுவதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி இருந்தல் வேண்டும். 

பிரார்த்தனையாளர்கள், தங்களுக்கான விரிப்பை கொண்டுவருதல் வேண்டும்.

முகக் கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

இஹ்திராஷ் செயலியில் பச்சை நிறக் குறியீடு இருத்தல் வேண்டும்.

சமூக இடைவெளிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

12 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை மசூதிகளுக்கு அழைத்து வரக் கூடாது

உணவு, தன்னீர் போன்றவற்றை பரிமாறக் கூடாது

இப்தார் ஏற்பாடுகளை மசூதிகளிலோ அல்லது மசூதி முன்றலிலோ ஏற்பாடு செய்யக் கூடாது

தாராவீஹ் தொழுகை, தஹஜ்ஜுத் (கியாமுல்லைல்) மற்றும் ஐடிகாஃப் ஆகியவை மசூதிகளில் அனுமதிக்கப்படவில்லை.

மசூதிகளில் உள்ள பிரார்த்தனை மண்டபங்கள், பாங்கு சொன்னவுடன் திறந்து, தொழுகை முடிந்தவுடன் மூடப்படல் வேண்டும்

மசூதிகளில் உள்ள பெண்கள் பிரார்த்தனை பகுதிகள், குளியலறை, அங்க சுத்தி செய்யும் இடம்  மற்றும் நீர் குளிரூட்டிகள் மூடப்பட்டிருக்கும்

தனிப்பட்ட பாய் மற்றும் புனித குர்ஆனின் நகலை மசூதிகளில் விடக்கூடாது.

ஐங்காலத் தொழுகைக்காகவும், வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்காவும் பள்ளிவாசல்கள் திறக்கப்படுவதனால், கொரோனா பரவுவதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நடந்து கொள்ளுமாறு அவ்காப் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.