March 18, 2021

முஸ்லீம்கள் மீது இனவாத தீப்பந்து வீச்சு, சமூகம் சட்டங்களை முழுமையாக ஏற்றே நடக்கின்றது - றிப்கான்


இலங்கை முஸ்லீம்கள் இந்த நாட்டையும் நாட்டின் அரச சட்டங்களையும் முழுமையாக மதித்து பின்பற்றக்கூடியவர்கள் ஆனால் இன்று அரசியல் ரீதியான சில இனவாதிகளினால்  முஸ்லீம்கள் மீது இனவாத தீப்பந்து வீசப்படுகின்றது இனவாதத்தை தூண்டும் வகையில் யாரும் பேசக்கூடாது என்று சட்டம் இயற்றிவிட்டு முஸ்லீம்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் மாகாண உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் சைவம் மற்றும் கிறிஸ்தவ மக்களையோ   அல்லது  சிங்கள மக்களையோ இனரீதியான கருத்துக்களை கொண்டு தாக்குவதில்லை அதேபோல அவர்களுடனான முரண்பாடுகளையும் விரும்புவதில்லை மாறாக ஒவ்வொரு மதத்தவர்களுடனும்  இனத்தவர்களுடனும் ஒன்றிணைந்து வாழவே முயட்சிக்கின்றனர் 

இவ்வாறான ஒற்றுமையினை விரும்பக்கூடிய முஸ்லீம்களை இந்த நாட்டில் இருக்கின்ற இனவாதிகள் தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவது மிகவும் கவலையளிக்கின்றது  இந்த நாட்டிலே சிறந்த சட்டத்துறை வல்லுநர்கள் உண்மையான நீதிபதிகள் சிறந்த வழக்கறிஞர்கள் அதிகாரம் படைத்த முக்கிய அரச அதிகாரிகள் இருக்கின்ரீர்கள் உங்களை நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் இனவாதத்தை அளித்து இந்த நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி ஒற்றுமையான சமூகத்தை உருவாக்க வேண்டியது எங்கள்  அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது 

எனவே எதிர்வருகின்ற நாட்கள் இந்த நாடு சமாதானமான அனைத்து இன  மக்களும்ஒன்றுபட்டு வாழ  அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் இந்த ஒற்றுமைக்கான  செயற்பாட்டில் நான் முதல் ஆளாக இந்த சமூகத்திற்காக முன்னிருப்பேன் மக்களாகிய நீங்களும் முன்னிற்க வேண்டும் என்றும் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

3 கருத்துரைகள்:

simply because racism is so easy to arouse in order to win votes.

இவ்வாக்கத்தின் மூன்றாம் பந்தி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. மதரீதியில் பார்க்கும்போது இந்துக்களாலோ கிறித்தவரகளாலோ முஸ்லிம்கள்மீது நடாத்தப்படும் இனரீதியிலான கலாசாரத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது. தமிழர்கள் என்கின்றபோது அதனைத் தடுத்து நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. கிறித்தவ மக்கள் என்கின்றபோது கர்தினால் அவரகள் இருக்கின்றார்கள். ஆனால் பௌத்தரகள் என்கின்றபோது அவரகளைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லை. பௌத்த அரசியல்வாதிகள் எரிகின்ற நெருப்புக்கு எண்ணை விடவே முன்னிற்பர். ஆனால் சிங்கள பௌத்த சமூகத்திலுள்ள புத்திஜீவிகளால் மாத்திரமே பௌத்த மக்களிடம் காணும் இனவாதப்போக்கினை தமது அறிவாற்றல்மூலம் கட்டுப்படுத்த அல்லது தடுத்து நிறுத்த முடியும். அவரகளும் அதனைச் செய்யமாட்டார்கள். அவரகளும் இந்த இனவாத தீயினை அகற்றுவதற்கு தமது வெளிப்பாடுகளை எந்தளவுக்குப் பயன்படுத்துவர் என்பதுதான் கேள்விக்குட்பட்டதாகும். நாடு இதே விதமாகப் போய்க் கொண்டிருநதால் இன்னும் அறுநூறு வருடங்கள் சென்றாலும் இலங்கை இப்படியே எந்த பொருளாதார சமூக மாற்றங்களும் இன்றி இருக்கும். மிகச் சிலர் இனவாதத்தினைப் பயன்படுத்தி சகல வழிகளிலும் முன்னேற்றமடைவர். அதனை நாங்கள் இப்போதும் எப்போதும் அதனைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். மிகவும் பலர் அதனுள் மாட்டுபபட்டு (கூலிக்கு மாரடித்து) அழிவின் உச்சத்திற்கே சென்று விடுவர். இன விகிதாசாரத்தின்படி அதிலும் அழிவிலும் சிங்கள பௌத்தர்கள்தான் முன்னிலை வகிப்பர்.

சுப்பர் ஸ்டேட்மென்ட்! பேஷ், பேஷ். தாங்கள் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுவது அறிக்கையில் தெளிவாகிறது. தங்கள் சகோதரர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் வன்னியில் தாங்களும் தங்கள் சகோதரும் தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்காத ஏனைய சகோதர இன மக்கள் மீது வீசிய பல தீ பந்தங்களையும் அவர்களுக்கு இழைத்த அநீதிகள் அட்டுழியங்களையும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை. அன்றைய காலங்களில் வன்னியில் தங்களின் காட்டுத்தர்பாரில் நடந்தேரிய அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இனத் துவேசத்தின் காட்டுத் தீயான தாங்கள் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பற்றி கதைப்பது சாத்தான் வேதம் உச்சரிப்பது போல் உள்ளது. கடந்த காலங்களில் நீதி, நியாயம் இலங்கை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டு சிறந்த நற்பிரஜையாக ஒரு நிமிடம் கூட தாங்கள் வாழ்ந்ததில்லை என்பது தங்களுக்கே நன்கு தெரியும். தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும்(தற்போது தங்களுடன் யாரும் இல்லை என்பது தனிக்கதை) தவிர ஏனைய இலங்கை வாழ் முஸ்லிம் அனைவரும் ஏனைய பிற சமுகத்தினரை நன்கு மதித்து ஏலவே அவர்களுடன் நட்புறவுடன் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். தாங்கள் அதில் தீ பந்தத்தை வீசாது விட்டால் அதுவே போதும். அத்துடன் தற்போது நாடாளாவிய ரீதியில் அரும்பிவரும் முஸ்லிம்-தமிழ் நல்லுறவில் வெடிகுண்டை வீசிவிடாதீர்கள் பிளீஸ்.

Post a comment