Header Ads



கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டாலும் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது


தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசிகள் காரணமாக தொற்று நோயின் பரவல் குறையும் என்று பொருளாதாரம் தொடர்பான லண்டன் பல்கலைக்கழகத்தின் உலக சுகாதார கொள்கை உதவி பேராசிரியர் வைத்திய கலாநிதி கிலேர் வென்ஹம் தெரிவித்துள்ளார்.

உலக சனத்தொகை பாதுகாக்கப்படும் வரை கொரோனா தொற்று நோயின் பரவல் முடிவடையாது என்று அவர் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக வழங்கி முடிப்பதற்கு 2023-2024ஆம் ஆண்டு வரை செல்லக்கூடும்

இது நீண்ட காலம் என்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் வழமைக்கு திரும்பாது என்று கிலேர் வென்ஹம் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் எல்லை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கிலேர் வென்ஹம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.