Header Ads



கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமே பிரேதப்பெட்டிக்கான பணத்தை அறவிடும் நிலை - அனுரகுமார


கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான பிரதேப்பெட்டிகளுக்கான பணத்தை அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடமிருந்து அறவிடுகின்றனர் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் பிரதேப்பெட்டிக்கான செலவை கூட செலுத்த முடியாதநிலையில் அரசாங்கம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 சுகாதார நல சமூகபாதுகாப்பு நிதியத்தை உயிரிழந்தவர்களின் இறுதிசடங்குகளிற்காக பயன்படுத்துமாறு அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் அவர்கள் கொரோனா வைரசினால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இதெல்லாம் சிந்திக்க அரசிடம் நேரம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.