Header Ads



அக்குறணை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய மாணவி அஸ்மா, 196 புள்ளிகளைப் பெற்று மத்திய மாகாணத்தில் முதலிடம்


- இக்பால் அலி -

மத்திய மாகாணத்தில் இம்முறை வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில்  196 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவி பிரதமரின்  இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் அவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இம்முறை வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில்  அக்குறணை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய மாணவி அஸ்மா அஸ்ரப் 196 புள்ளிகளைப் பெற்று மத்திய மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக 196 அதி கூடிய புள்ளிகளைப் பெற்று தம் பாடசாலைக்கும் தமது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவி கருத்து தெரிவிக்கையில் இப்பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிய இறைவனைக்கு  முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது பாடசாலை அதிபர் திருமதி ரிஹானா ஸெய்ன், வகுப்பாசிரியை திருமதி ஜே. ஜனூசியா  மற்றும் என்னுடைய தாய் தந்தையலுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது தாய்  தந்தை இருவரும் ஆசிரியர்களாவர். உண்மையிலேயே  அவர்களுடைய  சிறந்த வழிகாட்டல்கள் எனக்கு கிடைத்தன. அவை மட்டுமல்ல  கொரோனா தொற்றுக் காலத்தில் ஒன்லை ஊடாக எல்லாப் பிராந்தியகளிலும் உள்ள வினாப் பத்திரங்களைப் பெற்று அதிகளவு பயிற்சிகள் செய்தேன்.  என்னுடைய இலக்கை வெற்றிகரமாக அடைந்து கொள்வதற்குப் இந்தப் பெறுபேறு ஒரு ஏணிப்படியாக அமையும் என்பதுடன் எதிர்காலத்தில்  சிறந்த வைத்தியராக வர வேண்டும் என்பது என்னுடைய  இலட்சியமாகும் என்று இம்மாணவி மேலும் தெரிவித்தார்.

அக்குறணை நீரெல்லை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் எம். சி. எம். அஸ்ரப் மற்றும் அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக  கடமையாற்றும் எம்.. எஸ். எம். ஹிமாய தம்பதிகளின் புதல்வியாவர்.

இக்பால் அலி



No comments

Powered by Blogger.