#அறிமுகம்
பாண்டிருப்பில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயம் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது, இங்கு பாரதப் போரை நினைவு கூருமுகமாக வருடாந்தம் 18 தினங்கள் உற்சவம் இடம்பெறுவதுடன், தீ மிதிப்பும் இடம்பெறும்.இதில் பல்லின மக்கள் கலந்து கொள்வர், இம்மெறை செப்டம்பர் 24- ஒக்டோபர் 12 வரை இடம்பெறும்..
#இன_உறவுக்கான_இடம்
கல்முனையில் தமிழ்,முஸ்லிம் இன உறவின் அடையாள நிகழ்வுகளாக விளங்குபவை, திரௌபதி அம்மன் தீப்பள்ளயமும், கடற்கரைப்பள்ளி #நாகூர்_ஆண்டகை கொடியேற்றமுமாகும், இது இப்பிரதேச உறவின் நீண்டகால இனவுறவுப் பாரம்பரியத்தின் இரு கண்களாக விளங்குகின்றன,.ஆனால் இன்று திரௌபதி அம்மன் ஆலய நிர்வாகம் இதனைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளமை கவலையான விடயம்
#வரலாற்று_சம்பவம்,
ஆரம்ப காலத்தில் கிழக்கிலங்கையில் முக்குவ இனத் தமிழ் பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர், அவர்களின் வாழ்வியல் பரம்பரைக்கு எதிரான தன்மை கொண்ட #திமிலர்கள் அவர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்ததுடன், அவர்களது கோயில்களையும், உயிர்களையும், சொத்துக்களையும் அழித்தனர்,
இதனால் பாதிக்கப்பட்டிருந்த முக்குவ தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாக்க உதவி கோரியபோது அவர்ரகளுக்கு உதவிபுரிந்து பாதுகாத்து அம்மக்களின் வாழ்வியலை நிலை நாட்ட உதவியதுடன் அவர்களது குடிகளிலேயே திருமண உறவையும் பேணியவர்கள் #பட்டாணிகள் "என்ற முஸ்லிம்களாகும்.
இங்கு இடம் பெற்ற போரில் பட்டாணிய தளபதிகளில் சிலர் உயிரிழந்ததாகவும் நம்ப்ப்படுகின்றது,
#யார்_இந்த_பட்டாணிகள்??
கிபி. 14 ம் நூற்றாண்டுகளில் டில்லியை அலாவுத்தீன் கில்ஜி ஆண்டு கொண்டிருந்த வேளையில் இன்றைய கேரளாவில் வசித்தவர்களே இவர்கள் பட்டாணியர் என்றால் ," உருது மொழி பேசும் முகமதியர்" என்பது Tamil Lexicon அகராதியின் அர்த்தமாகும், இவர்கள் இயல்பிலேயே போர் ஆற்றல்மிக்க பலசாலி முஸ்லிம்களாகும். இவர்களைப் பற்றி "மட்டக்களப்பு மான்மியத்தில் FXC நடராசா (பக்கம் 66) தெளிவாக குறிப்பிடுகின்றார்.
#போர்ப்பின்னணி
திமிலர்கள் தமது கோட்டையாக "திமிலத்தீவை"வைத்திருந்ததுடன் அத்துமீறி முக்குவப் பிரதேசங்களுக்கு படையெடுத்து முக்குவரைத் தாக்கினர், அதில் இருந்து பாதுகாக்க இடம்பெற்ற போர் பட்டாணிகளின் தலைமையில் இடம்பெற்றது, இந்தப் போரை இன்றைய மட்டக்களப்பு ஊர்கள் ஞாபகம் செய்கின்றன,அதன்படி , சத்துருவை கொன்ற இடமே இன்றைய சத்துருக்கொண்டான் ,எனவும் நாலா புறமும் திரிந்த படைகள் சந்தித்த இடமே சந்தி வெளி எனவும், வந்து இளைப்பாறிய இடமே " "வந்தாறு மூலை "எனவும், திமிலர்கள் மீண்டும் உள்ளே வராதபடி பட்டாணிகள் காவலரண் அமைத்த இடமே "ஏறாவூர்" எனவும் பெயர் பெற்றதாக, பண்டிதர் வி்.சி. கந்தையாவின் மட்டக்களப்பு தமிழகம் நூல்(பக்கம் 391, 392, 393,) குறிப்பிடுகின்றது,
இதே விடயத்தை கல்முனைக்குடி "ஜும்மாப்பள்ளி வரலாறு, வரலாற்று பேழை , ஆகிய நூல்களில் ஏ்.ஆதம்பாவா, & ஹாஜி உஸ்மான் ஸாஹிப் ஆகியோரும் குறிப்பிடுகின்றனர்.
#நன்றிக்கடன்_நினைவுகள்
பட்டாணிகள் தமது இனத்தை பாதுகாத்ததற்காக முக்குவர்களின் 18 குடிகளிலும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததுடன் ,தமக்கே உரிய கோயில்களிலும் அவர்களுக்கான நன்றிப் பூசைகளையும் செய்து வந்தனர்,
அந்த வகையிலேயே தாழங்குடாவில் உள்ள பரம நயினார் மற்றும், பெரிய தம்பிரான் ஆலயச் சடங்குகளில் இன்றும்" பட்டாணி மடை" வைக்கும் பழக்கம் உள்ளதாக" மட்டக்களப்பு சிறு தெய்வ வழிபாடு ஓர் அறிமுகம் என்ற நூலில்( பக்கம்-101,102) மகேஸ்வரலிங்கம் குறிப்பிடுகின்றார்,
ஆனாலும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தில் மிகவும் விஷேடமாக. பட்டாணிகளுக்கென விஷேட பூஜை நடாத்தப்பட்டு வருகிறது/ வந்தது.
#பட்டாணி_பூசை,
திரௌபதி அம்மன் ஆலயத்தில் இதற்கான விசேட பந்தல் அமைக்கப்படும்,அங்கு உப தெய்வமாக கருதப்படும் பட்டாணி பூசையில் சிலைகள் எதுவும் வைக்கப்படுவதில்லை, மாறாக ஒளி விளக்கு மாத்திரமே வைக்கப்படும் என சண்முக நாதன் தனது பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் என்ற நூலில் (பக்கம்70) குறிப்பிடுகின்றார்,
அத்தோடு பந்தலுக்கு வெளியே தலைப்பாகை ,தாடி உள்ள முஸ்லிம் அடையாள உருவங்கள் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது,
#பட்டாணி_பாடல்
பட்டாணி தெய்வத்திற்கான பூஜையின் போது பூசாரியினால் பாடப்படும் பாடலானது முற்றிலும் இஸ்லாமிய மயமானது அதன்படி்..
"லாஇலாக இல்லல்லாஹ், முஹம்மது றசூலுல்லாஹ்,-
மக்கம் தொழுத பிள்ளை முஹம்மது
வேதம் தொழுத பிள்ளை கொத்துவா
வேதமல்லோ,பட்டாணியர் றாகூத்தான்
நாகூராப் பள்ளியிலே மீராசாய்வு
நல்லவரம் பேறு பெற்றார்,
ஐந்து நேரத் தொழுகை பட்டாணியார் அயரார் ஏழு நாளும்........"
........எனத் தொடர்கின்றது,
இந்த பாடல்களில் உள்ள விடயங்களின் ஊடாக சிலர் இந்த கோயில் தொடர்பு நாகூரில் வாழ்ந்த ஷாகுல் ஹமீத் வலியுள்ளா அவர்களை ஞாபகம் செய்வதாகவும் கூறுகின்றனர்,இது இந்தியாவிலும் பல இடங்களில் உண்டு,
#குடி_வழி_தொடர்புகள்
புராதன கால இந்து முக்குவர்களையும்,அவர்களின் வாழ்வியல் இருப்பையும் பாதுகாக்க பட்டாணி முஸ்லிம்கள் தமது நாடு, உயிர் என்பவற்றை தியாகம் செய்ததுடன் அந்த குலத்திலையே திருமணமும் செய்து சமயமாக இஸ்லாத்தை ப் பின்பற்றினர், அதனால்தான் இந்துக்களின் குடிவழி முறை கிழக்கு முஸ்லிம்களிடம் இன்றும் உள்ளது,
இதனை பேராசிரியர் பத்மநாதனும் உறுதிப்படுத்துகின்றார்,
#இன்றைய_முடிவும், #வரலாற்றுத்_தவறும்,
இவ்வாறு பல வழிகளில் உதவிய முஸ்லிம் "வகுத்துவார்" உறவுகளுக்கு தாம் வழிபட்ட கோயில்களிலும், வாழ்வியலும் இடம் கொடுத்த முக்குவ இந்து முன்னோரைப் பாராட்டும் அதே வேளை, இன்றைய கோயில் நிர்வாகம் முஸ்லிம் வர்த்தகர்களை ஆலய நிகழ்வில் வியாபாரம் செய்வதற்கு தடுத்துள்ளமையானது, மிகப்பெரும் வரலாற்றுத் தவறாகவே கொள்ள வேண்டி உள்ளது,
உண்மையில் இப்பிரதேசத்தில் உள்ள ஏனைய கோயில் நிகழ்வுகளை விட பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் ஆர்வமாகக் கலந்து கொள்வது மரபாகும், நிர்வாகத்தின் இந்த தவறான முடிவு இன உறவிலும் பாதிப்பை உண்டு பண்ணும் என்பதில் ஐயமில்லை, பல முஸ்லிம்கள் இது பற்றி தமது கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
அந்தவகையில் , ஒரு நிகழ்வில் இன ரீதியான தடைகளை உருவாக்குவதும், நடை முறைப்படுத்துவதும், வழிபாட்டு ரீதியாக ஓரளவு ஏற்கக் கூடியதாக இருப்பினும் , வரலாற்று ரீதியாக எம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகவே இதனைக் கருத வேண்டி உள்ளது, ...
#இனியாவது_உரியவர்கள்_சிந்தித்துசெயற்படட்டும்
முபிஸால் அபூபக்கர்
முது நிலை விரிவுரையாளர் மெய்யியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
9 கருத்துரைகள்:
இந்த கதைகளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு சரியான பதிலடியை தமிழ் இனவாதிகளுக்கு கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் ஊர்களுக்குள் நுழைய தடையென்றால் முஸ்லீம் ஊர்களுக்கும் அதை கடைப்பிடியுங்கள். தமிழ் நிறுவனங்களில் பொருள் கொள்வனவை நிறுத்துங்கள் நாம் ஓநாய்களுக்கு மத்தியில் வாழ்கின்றோம் என்பதை உணராதவரை இந்நாட்டில் முஸ்லீம் சமூகம் உருப்பட போவதில்லை
தமிழர் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் 1980 பதுகளில் இருந்தே குறிப்பாக கிழக்கில் பாரம்பரியங்களை நிராகரிக்கும் போக்கு வலுபெற்று நிறுவன மயபட்டுவிட்டது. இந்த பின்னணியிலும் 1985 கோவில்கள் எரிப்பு, வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றபட்டமை காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் ஈஸ்ட்டர் தாக்குதல் போன்ற பாதகங்களை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாகக் கிழக்கில் பெரும்பாலான மத நிறுவனங்களில் அடுத்தவரை வரவேற்கும்போக்கு இப்ப இல்லை. போர்காலங்களிலும் பாண்டிருப்பு கோவிலில் இளயவர்கள் முறுகல் இருந்தது. இன்றுள்ள சூழலில் கோவில்கள் பள்ளிவாசல்களில் தமிழரையும் முஸ்லிம்களையும் அனுமதிக்கிறது உகந்த சூழலை உருவாக்கும் என தோன்றவில்லை. . கிழக்கில் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக அணுகி தீர்வுகாணாமல் கீழ்மட்டங்களில் தீர்க்கிற வாய்ப்புகள் இல்லை. அரசியல் ரீதியாக என்னும்போது மாகாணசபை உள்ளாட்ச்சி போன்றவறிலாவது சுழற்ச்சி முறையில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள இருதரப்பும் இணங்கும்வரை கிழக்கில் மாறுதல்களுக்கு வாய்பில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி முஸ்லிம் மக்களின் பாரம்பரிய உரிமையை மீட்டுக்கொடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள் ஏனையவர்களுடன் ஒற்றுமையாகச்செயற்படவேண்டும் என்பதிலும் ஒற்றுமையுடன் செயற்படுபவர்கள் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அன்னியவர்களுக்கே உரித்தான வணக்க வழிபாடுகளில் பங்குகேற்பது பிழையான செயற்பாடாகும். ஆலய நிர்வாகிகள் தங்களின் மத நம்பிக்கையைப்பாதுகாக்க எடுத்த சிறந்த முடிவாகும்.
தமிழர்களின் (இந்து, கிறிஸ்தவ) ஆலங்களில் முஸ்லிம்களுக்கு என்ன வேலை?
கடந்த வருட ஈஸ்டரில் தேவாலங்களுக்கு வந்தவர்கள் செய்த வேலை தெரியும் தானே
சாதி,குலம்,பிரதேசம்,தொழில் என்ற அடிப்படையில்இந்துக்களிடையே நிலவிய முரண்பாடுகள் அவரகளது வாழ்வியலில் குரோத்த்தையும் பலி தீர்த்தலையும் கலாசாரமாக உள்வாங்கிக் கொண்டது.
இதனால் அவர்களிடையே நடந்த போர்கள் பிற்காலத்தில் வீரகாவியமாயின. சேர சோழ பாண்டிய யுத்தங்கள் இத்தகையவையே. இன்று கூட இந்திய தலித்துகளின் வாழ்க்கை முறையும் இந்துத்துவ pjb, RSS என்பவற்றின் வெறியாட்டமும் இவற்றையே பிரதிபலிக்கின்றன. இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று புண்ணிய பூமியாக திகழ்ந்த இலங்கையை இந்தியாவுக்கு கூட்டிக் கொடுத்தும் மேற்குலகுக்கு காட்டியும் கொடுத்து கபளிகரம் செய்த இனம்சார்ந்த ஜெயபாலன் அவர்கள் முஸ்லிம் கள் தொடர்பில் வேதம் ஓதுவது சாத்தானியத்தனமானதாகும்.
தலையைத்தடாவி கண்களைப் பிடுங்கும் தந்திரோபாய அடிப்படையில் திரைமறைவில் குழிதோண்டும் வேலையை விட்டுவிட்டு தனது சனத்துக்காக நேரடியாக எழுதும் பேனாவை கையில் எடுக்கவும்
யோவ் பட்டாணி வந்தா பூசை கொடுப்பம் இங்க யாரு பட்டானி இருக்கா சொல்லு பார்ப்பம் எங்கள காபீர் னு சொல்லுறீங்க ஆனா எங்க கோவில் ல வியாபாரம் பன்ன வரனும் சம்பாதிக்கனும் நல்ல கதை மனே
முஸ்லிம்கள் போகும் போக்கு……………
S,Bank இலும் இடம் வேண்டும் , ஏனைய வட்டிக்கடைகளிலும் இடம் வேண்டும் ,
போர போக்கில் சூதாட்ட , மதுபான சாலைகள் , விபசார விடுதிகள் என்பவற்றிலும் இடம் கேட்டாலும் ஆச்சரியம் இல்லை .
முஸ்லிம்கள் போகும் போக்கு……………
S,Bank இலும் இடம் வேண்டும் , ஏனைய வட்டிக்கடைகளிலும் இடம் வேண்டும் ,
போர போக்கில் சூதாட்ட , மதுபான சாலைகள் , விபசார விடுதிகள் என்பவற்றிலும் இடம் கேட்டாலும் ஆச்சரியம் இல்லை .
Post a comment