October 02, 2020

மாடறுப்பு தடையால் ஏற்படும் நன்மை தீமைகளை ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவித்த ஹனீபா மதனி

கௌரவ  ஐயா

நன்றியும்  பாராட்டும்  தெரிவித்தல்

தேசபிமானமிக்க இந்தநாட்டின் சுதந்திரப் பிரஜைகள் என்றவகையில் இந்தநாட்டைமிகவும் நேசிக்கும் உங்களுக்கு  எமது  நன்றியையும்

பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மட்டற்றமகிழ்ச்சியடைகின்றோம்.

கடந்த 07.09.2020 ந் திகதி  நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும்,  அதனைத் தொடர்ந்து 09.09.2020ந் திகதி நடைபெற்ற  அமைச்சரவையிலும் நமதுநாட்டில் இறைச்சிக்காக  மாடறுப்பதை  தடைசெய்யும் சட்டத்தை தாங்கள்  சமர்ப்பித்து இரு சபைகளிலுமே  ஏகமனதான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளீர்கள். 

இவ்விடயந் தொடர்பான  தங்களின்  முயற்சிக்கு  பூரண  வெற்றி  கிடைத்திருக்கிறது. இதற்கு  எமது  மனப்பூர்வமான  நன்றிகளையும்,  பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

'கொல்லாமை'  என்ற  தத்துவத்தை  பௌத்தமக்களைப் பெரும்பான்மையாகக்  கொண்ட நமது  நாட்டில் நடைமுறைப்படுத்தவேண்டும்  என்ற விடயத்தில் அதிதீவிரவாதமனப் பாங்கைக் கொண்டவர்களின்  நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிவைக்கும்  வகையில் இது நடைபெற்றுமுடிந்திருக்கிறது  என்பதை நாம் அனைவரும்  நன்கு  அறிவோம்.

இச்சட்டம்  அமுலுக்குவரும்  போது அது இந்த  நாட்டில் சிறுபான்மையாக வாழும்  முஸ்லிம்  சமூகத்திற்கு  பெரும் நஷ்டத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்ற மாயை  நெடுங்காலமாக  நமது நாட்டில் உலவிவருகின்றது.

அது  முற்றிலும் உண்மைக்கு  முரணானதாகும். நீண்டகாலமாக பூதாகரமாக  புரையோடிப்  போயிருந்த இம்மாயையின்  உண்மைத் தன்மையை அனைத்து  மக்களும் அறிந்து  கொள்வதற்கு  உங்களின் இந்த  தீர்மானம் வழிசமைத்திருக்கின்றது. நமது  நாட்டில் நாளாந்தம் 5000 மாடுகள் இறைச்சிக்காக  அறுக்கப்படுகின்றன. 

இவ்விறைச்சிகள் தனியே முஸ்லிம்களால்  மட்டும்  சாப்பிடப்படுவதில்லை. முஸ்லிம்களே  பெருவாரியாக உண்ணுகின்றனர் என்பது  ஒரு பிரேமை மட்டுமே.  குறைந்தவிலையில் தமது கறிக்குரிய மாமிசத்தை வாங்கி உண்ண வேண்டும் என்ற  நோக்குடைய நாட்டிலுள்ளவறியவர்கள், உடலுக்குக்கட்டமைப்பையும்  புரதச் சத்தையும் வேண்டிநிற்கின்ற இராணுவத்தினர்,  ருசியாகவும்,  இலகுவாகவும் கறியைச்சமைத்துக் கொள்ளவிரும்பும்  உணவகங்கள்  ஆகியன இதனை  அதிகம்பயன்படுத்துகின்றனர்.

கௌரவபிரதமர் அவர்களே!

இந்தக்  கடிதத்தை  எழுதும்  நானும் மாட்டிறைச்சியை  பெரிதாகச் சாப்பிடுவதில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி உண்பதுமிகவும் விரும்பத்தக்க ஒன்றுமல்ல என்ற உண்மையும் நாட்டிலுள்ள அனேகருக்குத் தெரியாது.

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது 63 வருடகாலத்தில் ஒரு தடவையாவது மாட்டிறைச்சி உண்டிருக்கவில்லை. அதேபோன்று மற்றவர்கள்  அதனை உண்பதற்கு  அவர்கள்  ஆர்வப்படுத்தவுமில்லை.

நீங்கள் அமுல்செய்யவிருக்கும்  இந்ததடைச் சட்டத்தால் உண்மையாகப் பாதிக்கப்படப்போவது  ஒவ்வொரு  மாதமும் அறுவைக்குத் தேவையான 150,000 (ஒரு இலட்சத்திஐம்பதாயிரம்) மாடுகளையும் பண்ணையிலிருந்து  சந்தைக்கு விடும் பண்ணை  உரிமையாளர்களேயாவர்.

பெரும்பாலும்  எம்பிலிபிட்டி, ஹம்பாந்தோட்டை,  வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, தனல்மல்விலை,  காலி,  தங்கல்ல, அம்பலாந்தொட்ட, கொட்யாக்கல, சியம்பலாந்துவ, கொலநுங்கே,  பாணம,  ரிதிதென்ன, புனானை மற்றும்  தமங்கடுவ போன்ற  இடங்களிலிருந்தே இந்த  அறுவை  மாடுகள் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன.

அடுத்து  ஏழைகளும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களும், குறைந்த  விலையில்  மாமிச  உணவைப் பெறமுயற்சிப்பவர்களும் பாதிப்படைகின்றனர். இதேபோல் முஸ்லிம்களின் சமயக் கடமைகளில் ஒன்றான 'உழ்ஹிய்யா'  கொடுப்பதற்கும் மாடு அறுக்கமுடியாத ஓர்  சூழ்நிலை  ஏற்படலாம். அப்போது  மாடுகளை அறுத்து  மாமிசங்களை  ஏழைகளுக்குத்  தானம் செய்வதற்கு

பிரதியீடாக  ஆடுகளை  அறுத்து  அதன் இறைச்சிகளை  ஏழைகளுக்கு  பங்கீடு

செய்வதற்கு  இஸ்லாமிய  மார்க்கத்தில் பிரதியீட்டுவழிகள்

சொல்லப்பட்டிருக்கின்றன.


இறைச்சிக்காக  மாடறுப்பைத் தடை  செய்த  பின்பு  நாட்டில் இறைச்சித்  தேவை

உணரப்படுமாயின் தேவையான  அளவு  இறைச்சியை  வெளிநாடுகளிலிருந்து

நாட்டுக்குள் இறக்குமதி செய்யமுடியும்  என  அரசால் இது தொடர்பாக

ஆலோசனையும் வழங்கப்பட்டிருக்கின்றது.  இவ்விடயம்  இறக்குமதிகளைக்

குறைத்து கூடியவரையில் அன்னிய  செலாவணியை  மீதமாக்கும் நமது

மேன்மைதங்கிய  ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு  எதிரானவிடயமாகப்

பார்க்கப்பட இடமுண்டு. ஏனெனில் நமது

நாட்டின் நாளாந்தப்  பாவனைக்குத் தேவையான இறைச்சி 1,000,000 பத்து

இலட்சம் கிலோக்களாகும். ஒரு  வருடத்திற்கு அண்ணளவாக (1,000,000 x 365 /-)

365,000,000  (முப்பதாறு  தசம் ஐந்துமில்லியன்)  கிலோக்கள்  இறக்குமதி

செய்ய  வேண்டியேற்படும். வெளிநாடுகளுக்குச்  செலுத்த  வேண்டிய  கடன்

சுமைகளிலிருந்து  விடுபடமுயற்சிக்கும்  நமதுநாட்டுக்கு  இது  பெரும்

சுமையாக  அமைந்து  விடவாய்ப்புண்டு.


அமைதியின்  பேரொளி  எனப்போற்றப்படும்  புத்தபெருமான் ஞானம் பெற்ற,

உபதேசம் துவங்கிய,  பரிநிர்வாணம் அடைந்ததலங்களான  புத்தகயா,  சாரநாத்,

குசிநகர்  ஆகியபௌத்த  புனிதத் தலங்களை  தன்னகத்தே  கொண்டுள்ளபாரததேசம்

முழு உலகின் இறைச்சித்தேவையை  நிவர்த்திக்கும் வகையில் மாட்டிறைச்சி

ஏற்றுமதியில் முன்னணிவகிக்கின்றது  எனும் உண்மையை நாம் மீட்டிப்பார்க்க

வேண்டி  உள்ளது. பிரேசில், அவுஸ்திரேலியாவுக்கு  அடுத்தபடியாக இந்தியாவே

இறைச்சி  ஏற்றுமதியில்  03ம்  இடத்தில் முன்னணி  வகிக்கின்றது.


இந்தியப் பிரதமர் மோடி  அவர்கள் 2017 ஆம்  ஆண்டு  மட்டும் ஒரு இலட்சம்

டொன் மாட்டிறைச்சியை  சீனாவுக்கு  ஏற்றுமதி  செய்ய  ஒப்பந்தம்  செய்து

கொண்டதாகவும்,  இந்திய இறைச்சியை  வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி  செய்யும்

56  நிறுவனங்களில் முதல் 10 நிறுவனங்கள் இந்துக்களுக்குச்

சொந்தமானதாகும்.  அதிலும் அவர்கள் RSS பின்புலத்தைக் கொண்டவர்கள் என்றும்

இதில் Allana Sons  (Pvt) Ltd. என்ற நிறுவனம் மட்டும் 2017ம்  வருடத்தில்

312.6  மில்லியன் அமெரிக்க  டொலர் (5,740 மில்லியன் ரூபா)  பெறுமதியான

மாட்டிறைச்சியை  வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி  செய்திருக்கின்றது

என்றும் அண்மைக்காலமாக  இந்தியஊடகங்கள் செய்தி  வெளியிட்டுவருகின்றன.


நாளாந்தம்  நமக்குத்  தேவையான இறைச்சிக்காக  அறுக்கப்படும் 5,000

மாடுகளும் அறுக்கப்படாத  பட்சத்தில் அவை  ஒரு  வருடமாகும் போது

1,800,000/- (பதினெட்டுஇலட்சம்)  மாடுகளாகி  விடும். சராசரி  ஒருமாட்டை

ஒரு  மாதம் போஷிப்பதற்கு  அண்ணளவாக 10,000/-ரூபாய் செலவாகும்.

இந்தவகையில் 1,800,000    மாடுகளை  ஒருவருடம் வளர்த்துப் பாதுகாப்பதற்கு

(1,800,000x120,000) 21,600 மில்லியன் ரூபா தேவைப்படும்.


இறைச்சிக்காக  மாடுகளை  அறுப்பதை  தடைசெய்யும்  போது இவையும்  இவை

போன்ற  இன்னும்  பலபிரச்சினைகளும் வரவாய்ப்பிருக்கின்றது.  எனவேதான்

நாட்டுப்பற்றாளர்கள் அனைவரும்  இதுவிடயத்தில்  இருக்கின்ற

சரிபிழைகளையும் இலாபநட்டங்களையும் அண்ணளவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்

என்பதற்காகவே இந்த நீண்ட  மடலை  தங்களுக்கு எழுதவேண்டி ஏற்பட்டு

விட்டது.


இறுதியாக  நமதுநாட்டின் முன்னாள்  ஜனாதிபதிகளில் ஒருவரான  காலஞ்  சென்ற

ரணசிங்க  பிரேமதாச  அவர்கள்  ஜனாதிபதியாக இருந்த  போது  கொல்லாமையின்

அதிதீவிரவாதிகள் சிலர் ஓர் இரவு  அவரைச்  சந்தித்து  'கொல்லாமை'  எனும்

தத்துவத்தை  நடைமுறைப்படுத்த  வேண்டும் மாட்டிறைச்சிக் கடைகளை மூட

வேண்டும் என்றுவேண்டி  நின்றனர். நல்லதுநாட்டிலுள்ள  பன்றி இறைச்சிக்

கடைகளை மூடும் தீர்மானத்துடன் வாருங்கள் நாளையே  அனைத்து

மாட்டிறைச்சிக் கடைகளையும் மூடி விடுகிறேன். என்று  சொல்லி

அனுப்பினார். இதனைக் கேட்டுச் சென்றவர்கள் பின்புவரவே இல்லை  என்ற

செய்தியினை  நான் ஊடகங்களில் வாசித்ததுண்டு. இத்தருணத்தில் இதனை

மீட்டிப் பார்ப்பதும் மிகப் பொருத்தம் என  எண்ணுகின்றோம்.


இம்மடல்  நீண்டமைக்காக  உங்கள் மன்னிப்பை  எதிர்பார்க்கின்றோம்.


மீண்டும்    ஒருமுறைதங்களுக்கு  எமது  நன்றிகளும் வாழ்த்துக்களும்

உரித்தாகட்டும்.


'தெருவன் சரணாய்'


நேசமுள்ள,

எஸ்.எல்.எம். ஹனீபாமதனி

தலைவர், தேசியஒருமைப்பாட்டுக்கான முஸ்லிம் பேரவை.


2020.09.12


பிரதிகள்:


1)  அதிமேதகுகோட்டபாய ராஜபக்ஷ,          ஜனாதிபதி.

2)  கௌரவ சஜித் பிரேமதாச,

     எதிர்க்கட்சித் தலைவர்.

3) கௌரவ பஸீல் ராஜபக்ஷ,

     தலைவர்,துரித ஜனாதிபதி                       செயலணி.                                                  4)  கௌரவ,ஹேரத்,கால்நடை

        வழங்கள்,பண்ணைகள் மேம்பாடு

        இராஜாங்கஅமைச்சர்.


8 கருத்துரைகள்:

போராடி பெற்றால் தான் அது உரிமை. கெஞ்சிப்பெற்றால் அது பிச்சை என்னொறு சீன பழமொழி இருப்பதாக வாசித்த ஞாபகம்.

ஹனிபமதனி சேர், பிச்சை எடுத்து மாடு உண்ணவேண்டிய தேவையில்லை

All the leaders in the past like JR, Premadasa, Chandrika etc.rejected to ban beef because they considered everybody's wishes. But now only beef banned because political reasons and business purposes without considering local farmers, employment loss and environmental problems in the future. I hope that they will realise very soon for the impacts of this ban. They have not considered Qurbani is a religious rites of the Muslims.

ஐயா... ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது அறிக்கையில் மட்டும் தான்.! உங்களால் செய்ய முடியும்? வேறு ஒன்றும் இல்லை

நீங்கள் கடிதம் எழுதி விட்டீர்கள் என்பதனால் அவர்கள் கேட்டு விடுவார்கள்.

அதாவது விட்டாரே.

சொன்ன வாய்க்கும் உங்கள் வழக்கத்திற்கும் சரிதான் ஏனென்றால் சொன்ன வாயை மீண்டும் கழுவுங்கள் தூ தூ தூ

Why people are considering this issue as Muslim related? Christians and low caste Hindus eat more beef than Muslims. Why don’t you guys just ignore this matter and let the matter solve by itself.

இலங்கைக்கு அனுபவ பாடமே சிறந்தது

Post a comment