Header Ads



இலங்கை மருத்துவ சேவையை பாராட்டிய அமெரிக்க பெண் - அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு புகழாரம்

அமெரிக்காவை விட இலங்கையின் சுகாதார சேவை சிறப்பாக இருப்பதாக அமெரிக்க பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அலெனா அபிசேலா என்ற அமெரிக்கப் பெண் சமீபத்தில் வயிற்று வலிக்கான சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அந்தப் பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் அவர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்.

வைத்தியர் பி.கே. ரவீந்திரன் தலைமையிலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததும், அலெனா வைத்தியசாலையை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, வைத்தியசாலையின், குறிப்பு புத்தகத்தில், அலெனா ஒரு குறிப்பை எழுதி வைத்துள்ளார்.

“எல்லோரும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். இலங்கையில் மருத்துவ சேவை மிகச் சிறந்தது, அமெரிக்காவை விட இந்த மருத்துவமனையில் எங்களுக்கு ஒரு சிறந்த சேவை கிடைத்தது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.