Header Ads



பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பதற்காக, அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - சஜித்



(இராஜதுரை ஹஷான்)


மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை  அரசாங்கம் தவறாக  பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.


பெரும்பான்மை  ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்ற  காரணத்தினால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.  மக்களை ஒன்றுத்திரட்டி  கடுமையான எதிர்ப்பினை  வெளிப்படுத்துவோம்.   மக்களின் உரிமைகளையும், நிவாரணங்களையும்  பலமான எதிர்க்கட்சியாக செயற்பட்டு பெற்றுக் கொடுப்போம் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொளள் வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.


வட கொழும்பில் இடம்பெற்ற  நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1 comment:

  1. தேர்தல்கள் வேறு. அதனது பிரச்சாரங்கள் வேறு. பல் இலட்சக்கணக்காண சிங்கள சகோதரர்கள் ஏனைய இனத்தவரகளுடன் மிதமாகவே நடந்து கொள்கின்றனர். அவரகள அனைவரும் வன்முறைக்கு எதிரானவரகள். நாட்டில் "ஜனநாயகத்திற்கு" எதிரான பிரச்சினைகள் வரும்போது அவரகள்தான் முன் வரிசையில் நிற்பர். கடந்த காலம் இதனை எங்களுக்கு ஞாபகம் ஊட்டுகின்றது. இலங்கை மக்கள் ஜனநாயக விழுமியங்களில் மிகவும் மதிப்பு வைத்துளளனர். எனவே ஜனநாயகம் இங்கு தோற்பதற்கு சந்தர்ப்பமே இல்லை. ஆயினும் இனத்துவேசம், இனங்களுக்கிடையிலான சௌஜன்ய வாழ்வு ஆகியவை இங்கு மேம்படுத்தப்படலாம் என்பது இதன் குருத்து அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.