August 13, 2020

"நமக்குள் றிஷாத், ஹக்கீம், அதா என்று வேறுபாடு இருந்தாலும் அவர்களுக்கு எல்லோருமே ஒன்றுதான்"


- Nawfeer Atham Lebbe -

அதாஉள்ளாஹ் ஆதரவாளர்கள்,

பற்றி எரியும் உங்கள் மனங்களைப் புண்படுத்துவதாக எண்ண வேண்டாம். சில யதார்த்தங்களைச் சொல்ல வேண்டும்.

முதலில் NC தலைவர் அதாஉள்ளாஹ் அவர்களை அமைச்சுப் பதவி வழங்காமல் அவமானப்படுத்தியதை கண்டிக்கிறோம்.

ஆனால் இந்த அரசுக்காக நீங்கள் கட்டிய #கஃபத்துள்ளாவும், இந்த ஆட்சிக்கு கொடுத்த உலகப் புனிதவான் சான்றிதழும் சரியானதா? என்பது இப்போது புரிந்திருக்கும்.

இன்றும் கூட புரியாமல் இருந்தால் உங்கள் அரசியல் உணர்வுக்கு என்ன சொல்ல இயலுமோ தெரியாது. நீங்கள் அக்கரைப்பற்று பாலத்தையும் தாண்டி கொஞ்சம் யோசிக்கும் போதே, கொழும்பின், தென்னிலங்கையின் தற்போதைய மனோநிலை எப்படி உள்ளது என்று புரிந்து கொள்ள முடியும்.

இதையே பலமுறை நாங்கள் பேசி வந்தோம். இந்த ஆட்சியைக் கைப்பற்றிய முக்கிய #துரும்பு #முஸ்லிம் இனவாதமே என்பதை இப்போதாவது புரிந்து கொண்டிருப்பீர்.

நமக்குள் றிஷாத், ஹக்கீம், அதாஉள்ளாஹ் என்று வேறுபாடு இருந்தாலும் #அவர்களுக்கு நாம் எல்லோருமே முஸ்லிம் என்ற ஒன்று தான்.

நல்லதைச் சொல்லும் போது நாங்கள் மடையர்களே. ஏற்றி விட்டு ஏணியைத் தூக்குவதில் இந்தக் குடும்பத்தை விட யார் இருப்பர்? டக்ளஸுக்கு அமைச்சு ? ஏன் சேர்?..

அரசியலின் யதார்த்தம் வேறு நீங்கள் புரிந்து கொண்ட யதார்த்தம் வேறு. இன்னும் காலமிருக்கிறது நீங்கள் இந்த அரசைப் புரிந்து கொள்ளா விட்டாலும் உங்களை நம்பி வந்த சாய்ந்தமருதவர் புரிந்து கொள்வார்கள். பொறுத்திருப்போம் இணைந்து போவோம் #கரைந்து விடாது.

8 கருத்துரைகள்:

Excellent analysis. All Srilankan muslims to be kept their's faith in almighty.

இனவாதம் இல்லை எல்லோரும் இலங்கையர் என்றும் சிறுபான்மைத்தலைவர்கள் தான் இனவாதம் பேசி மக்களைப்பிரிக்கின்றனர் என்றும் பெரும்பான்மையினர் மத்தியில் நல்ல பெயர் எடுத்துக் கொண்ட அலி சப்ரி அவர்களுக்கே ஆப்பு வைக்குமளவுக்கு இனவாதம் விரவிக்கிடக்கின்றது். இது கசப்பானதாயினும் தவிர்க்க முடியாத விடயமாக மாறியுள்ளது. நாம் ஒருதனியாளாக மட்டும் மாற்றலாம் என்றால் அது உலக மகா போராட்டமே. முயற்சியானது பாராட்டப்பட வேண்டியது தான். போரடுவோம்... நீங்கள் இனவாதிகள் தான் என்று உறுதிப்படுத்தும் வரை சான்றாகப்பதியப்படும் வரை போராடுவோம். அடுத்த தேர்தலில் முடிவெடுப்போம் அதுவரை போராடுவோம்.

INAVAATHAM KAKKUVATHAIYE VALAKKAMAKKIKONDA, MUSLIM VISHAMIKALIL
NEEYUM ORUVAN.

இந்த பெரும்பாண்மை அரசை இப்படி பேசி பேசியே தான் அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்தீர்கள்.

அதாவுக்கு அமைச்சி கிடைக்காவிட்டாலும் அவன் ஆழும் கட்சி MP

உங்களுக்கு போட்டா வாக்குக்கு ஒரு சதமும் பெறுமதி இல்லாமல் போச்சே

மந்திரியா இருந்து செய்யாததை எதிர்கட்சியில இருந்தா கிழிக்க போறிங்க

எதையாவது வாங்கிக்கிட்டு இருபதுக்கு கைய உயர்ந்துற வழிய பாருங்க 18 ல செய்தது போல

நௌபீர்! தம்பி நீங்க அரசியல் எனும் பாடத்தை ஹக்கீம்் றிசாத் எனும் ஆசிரியர்களிடம் பயின்றுள்ளீர்கள்.அதாவுள்ளாஹ் எனும் பண்டிதரிடம் படிக்கும் காலம் விரைவில் வரும் .அந்நேரம் அவர் முன்னால் கால் மடித்து உட்கார்ந்து பயிலவும்.

Post a comment