Header Ads



பெய்ரூட்டை உலுக்கிய பாரிய வெடிப்பு


லெபனான் நாட்டில் முன்னாள் பிரதமர் ரபிக் ஹரிரி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் தீர்ப்பு வெளிவர இருக்கும் நிலையில் சக்திவாய்ந்த வெடிப்பு தலைநகரை உலுக்கியுள்ளது.

நகரின் துறைமுகப் பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, 

வெடிப்பு தொடர்பில் வெளியான காணொளி காட்சிகளில், நகரமெங்கும் கரும்புகை சூழ்ந்துள்ளதுடன், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஹரிரி கார் குண்டு மூலம் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு சந்தேக நபர்களின் விசாரணையில் ஐ.நா தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வெளியிட உள்ளது.

இந்த நான்கு பேரும் ஈரானிய ஆதரவுடைய ஹெஸ்பொல்லா குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்,

மட்டுமின்றி முன்னாள் பிரதமர் ஹரிரியின் மரணத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் ஆஜராகாமலே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் பேசிய லெபனானின் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹசன்,

பலர் மரணமடைந்துள்ளதாகவும் காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும், வெடிப்பால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவப்பகுதியில் வரவழைக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.