Header Ads



ஹிஸ்புல்லாஹ்வை ஏன் தோற்கடித்தீர்கள்..? துரோகத்தினாலும், சூழ்ச்சியினாலும் வீழ்த்தப்பட்ட வீரன்

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் பலத்த போட்டிகளுக்கும், எதிர்ப்புகளுக்கும், துரோகங்களுக்கும் மத்தியில் எமது உரிமைகளை பாதுகாக்கவும், சிறுபான்மை முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றத்தில் எமது குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், பெரும்பான்மை கடும்போக்கு சிந்தனை கொண்ட சில அரசியல் வாதிகளின் சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறை தோற்றப்பாட்டிற்கு எதிராக எமது மக்கள் குரல் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காகவேண்டி பலத்த பிரயத்தனத்திற்கு மத்தியில் பல பழைய முகங்களையும், சில புது முகங்களையும் மக்கள் ஆணையுடன் பாராளுமன்றன் அனுப்பியிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் கிழக்கின் சொத்தான ஓர் வீரன், எத்தனையோ தடவைகள் இந்த மக்களுக்காக பல இடங்களில் குரல் கொடுத்த மாமனிதன் இன்று துரோகத்தினாலும், சூழ்ச்சியினாலும்  விழ்த்தி மாபெரும் தவறை செய்திருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் அதன் பலனை நாம் நிச்சயம் அடைந்து கொள்வோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அன்பார்ந்த காத்தான்குடி மக்களே உங்களிடம் ஓர் கேள்விகேட்க ஆசைப்படுகின்றேன்.

என்ன காரணத்திற்காக ஹிஸ்புல்லாஹ்வை நீங்கள் தோற்கடித்தீர்கள்??????

அதற்கு நாங்கள் காரணம் இல்லை. எமது ஊர் மக்கள் அவருக்குத்தான் வாக்கினை வழங்கினார்கள் ஆனால் ஏனைய ஊர் மக்களின் வாக்கு சொற்ப அளவினில் கிடைத்ததன் காரணமாகத்தான் அவர் தோல்வி அடைந்தார் என்றும் அதேபோன்று எந்த சேவைகளும் செய்யவில்லை என்று மட்டும் காரணத்தை சொல்லிவிடாதீர்கள். உங்கள் மனசாட்சியுடன் தொட்டுச்சொல்லுங்கள் கௌரவ ஹிஸ்புல்லாஹ் உங்களுக்கும் உங்கள் ஊரிற்கும் என்ன துரோகம் செய்தார், பளபளப்பான சாலைகள், பள்ளிகள், பாடசாலைகள், வானுயர்ந்து சென்று பார்க்கும் போது வீதியெங்கும் மின்விளக்குகள் இப்படி எத்தனை எத்தனையோ ஆயிரம் அபிவிருத்திகள் என்று அடிக்கிக்கொண்டே போகலாம். அத்தனையும் ஒரு சொற்ப நொடிகளில் குழிதோண்டி புதைத்துவிட்டீர்களே. அதுமட்டுமன்றி இலங்கை வரலாற்றில் எந்த இடத்திலும் பேரீத்தம் மரம் முளைத்து காய்த்தது என்ற வரலாறே மிக மிக அரிது. ஆனால் காத்தான்குடி பிரதான வீதியை அந்த மனிதன் அலங்கரித்ததை போன்று வேறு எந்த முஸ்லிம் தலைமைகளும் மனதளவில்கூட செய்ய நினைக்கவும் இல்லை என்பது கசப்பான உண்மையே. அப்படிப்பட்ட ஓர் செயல் வீரனை அரசியல் அஸ்தமணம் ஆக்கியிருக்கின்றீர்களே!. 

முஸ்லிம்களின் கோட்டை என்று அழைக்கப்படும் கல்முனைக்கு வந்து பாருங்கள் ஹிஸ்புள்ளாஹ்வின் அருமையை உணர்ந்து கொள்வீர்கள். எத்தனை தடவைகள் இந்த கல்முனை மண் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையின் கீழ் இருந்திருந்தால் எவ்வளவு மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று எண்ணிய பல ஆயிரம் மனிதர்களில் நானும் ஒருவன். சில தினங்களுக்கு முன்பதாக ஒரு வேற்று மத சகோதரன் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் காத்தான்குடியை பற்றியும், கௌரவ ஹிஸ்புல்லாஹ்வின் சேவைகள் பற்றியும் அம்மக்களிடம் சொல்லியது மட்டும் அன்றி. அவன் மாத்திரம் முஸ்லிமாக இருந்திருந்தால் ஹிஸ்புல்லாஹ்வின் போட்டோவை வைத்து பூஜை செய்திருப்பேன் என்று சொன்னான். அதற்காக உங்களை பூஜை செய்ய சொல்லவில்லை. கொஞ்சமென்றாலும் ஒரு நன்றி விசுவாசமாய் இருந்திருக்க வேண்டும் அல்லவா.... ஒரு மாற்று மத சகோதனுக்கு விளங்கிகொண்ட  அளவிற்காவது எமது காத்தான்குடி சமுகத்திற்கு விழங்காமல் போய்விட்டடதே.

கல்முனை தொகிதியின் மேயர் எமது ஊர்த்தான். அவ்வாறு இருந்தும் அவரது சொந்த ஊரான மருதமுனையின் கடற்கரை வீதியை குறைந்தது கொங்ரீட் வீதியாககூட செப்பனிட முடியாமல் இருக்கிறது. ஆனால் காத்தான்குடி கடற்கரை வீதியை பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது ஏன் சில சமயம் ஆதங்கமாகவும் இருக்கின்றது. அவ்வாறான ஒரு மனிதனை துரோகத்தினாலும் சூழ்ச்சியினாலும் நீங்கள் தோற்கடித்து இருகின்றீர்களே.

இலங்கை முஸ்லீம்களுக்காக குரல் கொடுத்த தலைவர்களுள் ஓர் தளபதி கௌரவ ஹிஸ்புல்லாஹ், மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரபிற்கு அடுத்ததாக மிகப்பெரும் அபிவிருத்திகளை கிழக்கிலங்கையில் செய்த ஒரே  நபர் என்றால் அது கௌரவ ஹிஸ்புல்லாஹ் என்ற ஓர் ஆளுமைதான் என்று சொல்வேன். ஒரு சாதாரன குறுக்கு வீதியை செப்பனிட முடியாத அதிகாரம் கொண்ட சில அரசியல் வாதிகளின் மத்தியில் அவ்வளவு பெரிய படுவான் கரை பாலத்தை கொண்டு வந்து திறமையாக கட்டிய மகன் ஹிஸ்புல்லாஹ். ஏன் உங்கள் ஊர்களில் ஒவ்வொரு பாதைகளையும் கறுப்பு தார் ஊற்றி கருங்கம்பளம் விரித்து அழகு பார்த்த மகன் இந்த ஹிஸ்புல்லாஹ். இன்று தான் சொந்த ஊர் மக்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார். ஓர் பாடசாலையின் களிப்பறைகூட கட்டிக்கொடுக்க முடியாத அரசியல் வாதிகளுக்கு மத்தியில் இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் நிதியை தனது சொந்த முயற்சியில் எத்தனையோ தடைகளை தாண்டி மட்டக்களப்பு கெம்பஸ் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மூவின மக்களும் பயன்பெற வேண்டும் என்ற பொதுநலவான ஓர் ஆளுமை இன்று தனது சொந்த ஊர் மக்களால் சுயநலத்துக்காக தோற்கடிக்கப்பட்டிருகின்றான்.

நீலாவணை ஊர் கழிந்து காத்தான்குடி நகர் வரும் வரைக்கும் எந்த சத்தமும் இன்றி இருள் சூழ்ந்த வண்ணமாகவே காணப்படும். ஆனால் காத்தான்குடியை அடைந்தது முதல் அதன் இறுதிவரை வண்ண மயங்களால் இறைவன் அருள் கொண்டு, இறைவன் துணையோடும் பிராகாசிக்கும் ஊராக உங்கள் ஊரை அழகு படுத்திய ஓர் தலைவன் கௌரவ ஹிஸ்புல்லாஹ். இலங்கை முஸ்லிம்களின் புராதன சின்னங்கள், வரலாறுகள் என்று அனைத்தும் எமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று வரலாற்று நூதனசாலையை காத்தான்குடி மண்ணில் அமைத்து ஊரிற்கு பெருமை சேர்த்த மகன் இன்று உங்களால் தலை குனிந்து நிற்கின்றானே. மனம் வேதனை அடைகின்றது.

இலங்கை வரலாற்றில் பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு கட்டட கலையின் தொழினுட்பத்தை பயன்படுத்தி அல் அஹ்ஸா போன்று மாபெரும் முஸ்லிம்களின் அடையாழமான பள்ளிவாசலை காத்தான்குடி மண்ணில் நிறுவி அந்த மண்ணிற்கு பெருமை சேர்த்த மகன். அதில் நின்று கொண்டு எத்தனை செல்பிகள் எடுத்து மார்தட்டிக்கொண்டீர்கள். அது எப்படிப்பட்ட காலப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது என்று காத்தான்குடி மக்கள் ஆகிய உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அத்தனையும் மறந்து சொற்ப அரசியலுக்காகவும், மாற்று நபர்களின் பசப்பு வார்த்தைகளையும் நம்பி ஓர் உண்மையான சேவகனை சேற்றில் தள்ளி விட்டீர்களே. இதன் மூலம் நீங்களும் உங்கள் ஊரும் அடைந்த பயன் என்ன மக்களே?????? எல்லோரும் சேர்ந்து சொந்த ஊர் மகனை தோற்கடித்து இருக்கின்றீர்கள். இது நியாயமா??? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஹிஸ்புல்லாஹ்வின் அதிகாரத்தில் மற்றும் சேவைகளில் நீங்கள் கண்ட குறைதான் என்ன?????

கல்முனையின் காவலன் கௌரவ கரிஸ் அவர்கள் கல்முனைக்கும், கல்முனை மக்களுக்கும் எதுவும் செய்வில்லை என்று பல பிரசாரங்கள் நடைபெற்றன. அவ்வாறு இருந்தும் கல்முனையின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அதி கூடிய விருப்பு வாக்குகள் மூலமாக அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கரிஸ் ஆவார். ஆனால் சொந்த ஊரான காத்தன்குடிக்காக ஹிஸ்புல்லாஹ் செய்யாத சேவைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சேவைகள் செய்த மகன் இன்று அதே சொந்த ஊர் மக்களால் தோற்கடிக்கப்பட்டிருகின்றார். இப்படிப்பட்ட ஒரு சேவகன் எங்களுக்கு இல்லையே என்று நினைத்து கவலைப்படுகின்றோம்.

இவ்வாறு பல ஆயிரம் சேவைகளை  கொண்டு கௌரவ ஹிஸ்புல்லாஹ் அவர்களை பற்றி சொல்ல முடியும் அனால் அதற்காக இந்த காகிதங்களும், பேனா மையும் போதுமானதா என்று தெரியவில்லை சகோதரர்களே.

சில சுயநலம் கொண்ட காற்புணர்வுடைய அதே ஊரைச்சேர்ந்த சில நபர்கள் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக செயற்பட்டனர். அவர்களுக்கு பின்னால் வால் பிடித்துக்கொண்டு உங்களில் சில ஊர் மக்களும் செயற்பட்டனர். உங்கள் ஊருக்காக ஹிஸ்புல்லாஹ்வை விட அவர்கள் என்ன செய்துவிட்டார்கள். ஹிஸ்புல்லாஹ் செய்ததில் ஒரு 10% அவர்கள் செய்திருப்பார்களா??? என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். தெளிவாக தெரிகின்றது அவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ்வை அழிக்க வேண்டும், அவரை அரசியலில் அநாதை ஆக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தனர். இது பலருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையே. அவ்வாறு தெரிந்திருந்தும் சொந்த ஊர் மக்களே துணை நின்று துரோகத்தினால் அந்த மாபெரும் தலைவன்,சேவகன் இன்று தோற்கடிக்கப்பட்டிருகின்றான்.

தனது ஊரில் இருக்கின்ற வேட்பாளருக்கு ஆதரவு வழங்காமல் அயல் ஊரில் இருக்கின்ற வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினார்கள். இதன் மூலம் அவர்கள் அடைந்து கொண்டதுதான் என்ன. சொந்த ஊரில் உள்ள தலைவனை தோற்கடித்தார்கள் அனால் அவர்களோ ஆதாரவு வழங்கிய அயலூர்  வேட்பாளரும் படு தோல்வி அடைந்தார். அல்லாஹு அக்பர். இறைவன் நீதியும் என்று ஒன்று இருக்கின்றது அல்லவா அதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

இதற்கு இன்னும் ஒரு உதாரணமான ஊராக சம்மாந்துறையை சொல்லலாம். தனியான தேர்தல் தொகுதி. தோறாயமாக 82000 வாக்குகள் கொண்ட ஊர். ஆனால் ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய் விட்டது. ஆனாலும் பரவாய் இல்லை மற்றைய ஊர் மகன் ஒருவன் அதன் மூலம் வெற்றி பெற்றிருக்கின்றான். ஆனால் காத்தான்குடி மண்ணிற்கு வரவேண்டிய மகுடத்தை சில அறிவிலிகளின் தவறான செயற்பாடு காரணமாக அந்த ஊர் மக்களை அரசியலில் அனாதைகளாக்கி இருக்கிறது. இது கௌரவ ஹிஸ்புல்லாஹ்வுக்கு கிடைத்த தோல்வி அல்ல ஒட்டு மொத்த காத்தான்குடி மக்களுக்கும் அவர்களுக்கு அவர்களாகவே செய்து கொண்ட துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதை நிச்சயம் அந்த மண் வெகு சீக்கிரம் உணர்ந்து கொள்ளும். 

இன்ஷா அல்லாஹ் இறைவன் எந்த காரணமும் இல்லாமல் எதையும் நாடமாட்டான். இந்த மகன் இறைவனால் நிச்சயமாக ஓர் நாள் மகுடம் சூட்டப்படுவான்.  அப்பொழுதும் அவன் இந்த காத்தான்குடி மக்கள் ஆகிய உங்களுக்காகவே மீண்டும் சேவைகளை செய்வான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அப்பொழுது நீங்கள் எந்த முகத்தை கொண்டு அந்த மகனின் முகத்தை பார்ப்பீர்கள் என்று உங்களுக்குள்ளே எண்ணிக்கொள்ளுங்கள்.

வேற்று ஊரானாக இருந்தாலும் மனதில் ஆழ்ந்த கவலை. இப்படி துரோகத்தினாலும், சூழ்ச்சியினாலும் ஓர் உண்மையான வீரனை வீழ்த்தியிருக்கின்றீர்களே என்று. அதுவும் அவரது சொந்த ஊர் மக்களால் என்று நினைக்கும் போது மனம் வெம்பி அழுது கண்ணீர் வடிக்கின்றது. என்னுடைய கவலையை வார்த்தைகளின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கின்றேன். இது யார் மனதையும் புண்படுத்துவதற்கான பதிவு அல்ல. என்னுடைய நண்பர்கள் சிலர் அதே ஊரை சேர்ந்தவர்கள் அவர்களுடன் கலந்துரையாடும் போது அவர்களுக்குள் இருக்கும் சொல்லமுடியாத வடுக்களை நான் உணர்ந்தேன். அதன் மூலமாகத்தான் இந்த ஆக்கத்தை எழுதினேன். இதில் எவருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஒர் மன உடைவின் ஆதங்கம்............... 

இறுதியாக உங்களுக்கு நியாபகம் ஊட்டலுக்கான ஓர் அல்குர்ஆன் வசனம்......

‘இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த நிஃமத்களை நினைத்துப்பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக்குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களை காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெரும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை தெளிவாக்குகிறான்” (3:103)

- சஹீம் ஹுஸைன் -


13 comments:

  1. அவர் வெற்றி அடைந்த பின்னர்தான் தோற்றதாக அறிவிக்கப்பட்டார்

    ReplyDelete
  2. idiot....you wrote this article as pro acting to him..? and used Al-Quraan verses for your support to him...?? Oh just remember he is also politician and who brought him to break the votes....
    Also...u mentioned that there are lightning only in KATTANKUDY then what you feel about this words... and how expect the votes from other people....!!! and why he planned the University and who are the management team.... Just think twice before you write anything like this..... If u want to support him its ur own rights and do it but dont drive the public by your foolish words...and even using Al-Quraan verses...for such a bad things

    ReplyDelete
  3. He has lost 2015 election also.According to the % of the muslims in the Batticola maximum 2 mps can get but they are divided into 3 political groups so the votes were spilt.

    ReplyDelete
  4. கொக்கு பறந்தால்தான் அதன் வெள்ளை தெறியும் .

    ReplyDelete
  5. i also feeling so bad about Brother Hissbullah been Defeated by his own peoples.

    ReplyDelete
  6. i also feeling so bad about Brother Hissbullah been Defeated by his own peoples.

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வது உண்மை. சீக்கிரம் இவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

    ReplyDelete
  8. correct decision by Kattankudy people

    ReplyDelete
  9. அவர் கிழக்கு மாகாணத்துக்கு என்ன செயதார் என்று கூறி இருக்குறேகால்

    வெளி மஹாநம்களுக்கு என்ன செயதார் என்று கூற முடியுமா

    ReplyDelete
  10. சகோதரரே !!!
    உங்களின் இந்த கட்டுரை பக்க சார்பாகவும் மற்றவர்களை குற்றச்சாட்டி அவதூறு கூறுகிறீர்கள் அது உங்களுக்கு எதையும் உண்மைகளை உணரக்கூடிய தண்மை இல்லை என்பதை காண்பிக்கப்படுகிறது காத்தான்குடியில் வெளித் தோற்றத்தில் ஹிஸ்புல்லா சேர் அவர்களாக இருந்தாலும் காத்தான்குடியில் உள்ள நிறைய சேவைகள் செய்தவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் சேர் என்பதை ஹிஸ்புல்லா சேர் அவர்கள் ஏற்றுக் கொண்ட விடயம். அதுதான் உண்மையும் கூட.

    ஹிஸ்புல்லா சேர் தோல்விக்கு காரணம் அவர் தான் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    ஒற்றுமை படுத்த நிறையவே முயற்சிகள் செய்யப்பட்டு விட்டுக் கொடுப்பு இல்லாமல் தோல்வியில் தான் முடிந்தது அதற்கு காரணம் ஹிஸ்புல்லா சேர் அவர்கள்

    ReplyDelete
  11. முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற 1987ல் இருந்து சகோதரர் ஹிஸ்புல்லாவை நாம் அறிவோம்.அந்தக்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி போராளிகள் இவர்மீது மிகுந்த நம்பிக்கையும்,பற்றுதலும், பாசமும்,நேசமும் வைத்திருக்கும் அளவுக்கு ஹிஸ்புல்லாவை நேசித்தோம்.அதுமட்டுமல்ல அப்போது இளைஞரான இவர் எதிர்காலத்தில் மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு இந்தக் கட்சியின் தலைவராகவும் முஸ்லிம் சமுதாயத்தின் காவலனாகவும் வருவார் என்று நம்பியிருந்தோம். அந்தக்காலத்தில் இவருடைய மேடை பேச்சுக்கள் இவ்வாறான நம்பிக்கைகளை எங்களுக்கு ஊட்டின. ஆனால் அற்ப பதவி மோகம் கொண்டு தலைமைத்துவ கட்டுப்பாடுகளை உடைத்து எங்கள் நம்பிக்கைகளையெல்லாம் தவிடு பொடியாக்கி இந்த கட்சியின் கட்டுக்கோப்பிலுருந்தி இவர் வெளியேறிதனால் இந்த அரசியல் மீதும் , அரசியல் வாதிகள் மீதும் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் எங்கள் உள்ளங்களில்விதைக்க காரணமாக இருந்த இந்த ஹிஸ்புல்லாவுக்காக துக்கப்படும் தம்பி சஹீம் ஹுசைனுக்காக வருந்துகிறேன்.

    ReplyDelete
  12. தீவீர வாதி தோற்கடிக்கப்பட்டான் மத வெறியன் ஒழிந்தான் இந்து கோவிலை உடைத்தான் கடவுள் தண்டனை கொடுத்துள்ளாா்

    ReplyDelete

Powered by Blogger.