July 06, 2020

பொய் செய்திகளை நம்பாதீர்கள் - பசிலுக்கு ஹோட்டல் இருந்தால் நானும் சென்று குளித்து, சாப்பிட்டு விட்டு வரலாம்

பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது போல, சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவுகள் எதுவும் இரத்துச் செய்யப்படவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது சொந்த கிராமமான மெதமுலனவில் இன்று -06 நடைபெற்ற கட்சியினருடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இன்றைய தினம் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. நான் நிதியமைச்சின் செயலாளரிடம் இது சம்பந்தமாக கேட்டேன். அப்படி எதுவும் இரத்துச் செய்யப்படவில்லை என அவர் கூறினார.

தற்போது நாடு முழுவதும் பொய்யான செய்திகள் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றன. நான் குருணாகல் மாவட்டத்திற்கு வேலை செய்யாமல், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு வேலை செய்வதாக சிலர் கூறுகின்றனர். எனினும் அது அப்படியல்ல.

குருணாகல் மாவட்டமும் ஒரு கஷ்டமான பிரதேசம். ஹம்பாந்தோட்டையில் போன்று குருணாகலில் வேலை செய்வோம். சில பிரதேசங்களில் இருக்கும் காணிகள் கோட்டாபய ராஜபக்சவுக்கு சொந்தமானது என சிலர் பிரசாரம் செய்கின்றனர்.

குருணாகலில் உள்ள தென்னந்தோட்டகாரர் ஒருவர் அப்படி கூறியுள்ளார். நான் அது குறித்து தேடிப்பார்த்தேன். தோட்டம் கோட்டாபய ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறினால், தோட்டத்தில் தேங்காய்கள் பாதுகாப்பாக இருக்கும் என தோட்டத்தின் உரிமையாளர் கூறினார்.

யாரும் காணிக்குள் வர மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். ஒரு ஹோட்டல் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என பிரசாரம் செய்தனர். அது குறித்தும் தேடிப்பார்த்தேன்.

பசிலுக்கு ஹோட்டல் இருப்பதாக கூறியதும் நானும் மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு ஹோட்டல் இருந்தால் நானும் சென்று குளித்து, சாப்பிட்டு விட்டு வரலாம்.

பின்னர் தேடிப்பார்த்தால் கப்பம் கோருவோரிடம் இருந்து தப்பிக்க அதன் உரிமையாளர் அப்படி கூறி வைத்துள்ளார்.

எனக்கும் கொள்ளுப்பிட்டியில் காணி இருப்பதாகவும் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

2 கருத்துரைகள்:

மேலே கூறப்பட்டவைகள்,நாட்டை முன்னேற்ற எதிர்காலத்திட்டங்களின் செயல்திட்டத்தின் வடிவமைப்பு தானா?

ஐயா, இந்த இலங்கை நாடு சிங்களவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டது. சிங்கள சமூகத்தைச் சார்ந்த யாரோ இருவரதான் ஜனாதிபதியாகவும் பிரதம அமைச்சராகவும் மாறி மாறி வரப் போகின்றீர்கள். முஸ்லிம் மக்களாகிய எங்களுக்கு அது பற்றி எந்தக் கவலையும் இல்லை. எந்த அரசியல்வாதியும் பொருளாதாரரீதியில் முன்னேற்றம் அடைந்தாலும் அவர்களைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களாகிய எங்களை ஜனநாயக வழிமுறைக்கு அமைவாக இந்த நாட்டில் அமைதியாக வாழ வழியமைத்துத் தாருங்கள் என்றுதான் தங்களை கேட்டுக் கொள்கின்றோம். முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் அமைதியாக வாழ்வதற்கு அவரகளது வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற நியதி இருக்குமானால் எங்கள் வாக்குரிமையையும் பறித்து விடுங்கள். எங்களுக்கு அது பற்றியும் கவலை இல்லை. எங்களுக்கு அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான. முஸ்லிம் மக்களாகிய நாங்கள் அடிபட்டு கஷ்டப்பட்டு எங்களுடைய முஸ்லிம் பிரதிநிதிகளை ஏதோ ஒரு சிங்களக் கட்சி ஒன்றின் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பியும் சாதாரண மக்களாகிய எங்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. இறுதியில் சாதாரண பொது மக்களாகிய எங்களுக்குத்தான் அடியும் உதையும் சொத்தழிப்பும் பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களால் நடந்து கொண்டிருக்கின்றது. காரணம் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் ஜனநாயக வழிமுறைக்கு அமைவாக ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு எங்கள் வாக்குகளை அளிக்கினறமைதான். UNP க்கு வாக்களிததால் SLFP/SLPP ஐ சேர்ந்த சிங்கள மக்களால் பேரழிவு. SLFP/SLPP க்கு வாக்களித்தால் UNP ஐ சார்ந்த சிங்கள மக்களால் பேரழிவு. மேளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல் முஸ்லிம்களுக்குத்தான் இரண்டு பக்கமும் அடி.. எனவே இது சம்பந்தமான ஒரு தீர்க்கமான முடிவைத் தாங்கள் எடுக்க வேண்டியது ஜனநாயகரீதியில் ஆட்சியினைச் கொண்டு செல்லுவதாக கடவுள்மீது ஆணையிட்டு உறுதி எடுத்திருக்கும் உங்களைப் போனற கணவான்களின் கைகளினால்த்தான் இருக்கின்றது. மனிதன் தனது எல்லாச் செயல்களுக்கும் இந்த உலகிலும் மறு உலகிலும் பதிலளித்துத்தான் ஆக வேண்டும். மறந்துவிட வேண்டாம்.

Sir, this Sri Lanka is a Sinhalese majority country. Someone from the Sinhala community is going to become the President and the Prime Minister. As Muslims, we have no concern about that. We do not care about any politician making economic progress. But we, the Muslims, kindly request you to assist us to live peacefully and harmony in this country under the democratic process. If there is a rule that the Muslim people should have lose their voting rights even for that we are prepared to that. Whether we have it or not. It is no use for us as ordinary people when we, as Muslims, suffer and suffer and send our Muslim representatives to parliament through a Sinhala party. Ultimately, it is only us, the public, who are losing our hard-earned assets with intolerable physical tortures by the Sinhalese Buddhists. The reason is that we, as Muslims, do cast our franchise to whatever a Sinhala party in accordance with the democratic process. Disaster for Muslim people for voting to SLFP/SLPP by the UNP thugs; same thing for again Muslims to vote for UNP by the SLFP/SLPP thugs. It is only in the hands of your honour to stop it; that you have sworn to God that you will rule the country democratically. Human must respond to all his actions in this world and the next. Do not forget.

Post a comment