July 11, 2020

“ஜனாஸாக்களை எரித்தவர்களுக்காக வாக்குக்கேட்கும், முஸ்லிம் தரகர்கள் வெட்கங்கெட்டவர்கள்” – அஷாத் சாலி

- ஊடகப்பிரிவு -

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை  தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்காக வாக்குக் கேட்கும் முஸ்லிம் வியாபாரிகள், உண்மையாகவே கலிமாச் சொல்லியிருந்தால், தமது அறியாமையை உணர்ந்து, உடனடியாக பிரசார நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கோரியுள்ளார்.

தொடர்ந்தும் இவ்வாறு முஸ்லிம்களின் வாக்குகளுக்காக வீடுவீடாக அலைவதும், பெரிய ஹோட்டல்களில் முஸ்லிம்களை பலாத்காரமாக அழைத்து கூட்டம் போடுவதும், வெட்கக் கேடான செயல் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

“தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டிகளில், பொதுக் கூட்டங்களுக்கு 500 பேருக்கு மேல் அழைக்கப்படக் கூடாதென்று குறிப்பிடப்பட்டுள்ள போதும், இந்த மொட்டு முஸ்லிம் ஏஜெண்டுகளும், கொந்தராத்துக்காரர்களும், குருநாகலில் உள்ள முஸ்லிம் வியாபார நிலையங்களுக்குச் சென்று, அவர்களின் பெயரை பதிவு செய்து, வலுக்கட்டாயமாக கூட்டத்துக்கு அழைக்கின்றார்கள்.

இலங்கை வரலாற்றிலே, ஏன் உலக வரலாற்றில் கூட, ராஜபக்ஷ அரசாங்கம்தான் “முஸ்லிம்களின் ஜனஸாக்களை எரித்த ஆட்சி” என்று முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசரை, அவரது இருக்கையிலிருந்து தூக்கியெறிந்தவர்களுக்கு, ஜே.எம்.ஒ (JMO) வினரை கட்டுப்படுத்த முடியாதா? இவர்கள் யாருக்கு கதை சொல்கின்றார்கள்?

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க, ஒவ்வொரு ஊடகவியலாளர் மாநாட்டின் போதும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) வழிகாட்டிக்கிணங்கவே தாங்கள் செயற்படுவதாகக் கூறுகின்றார். ஆனால், உலக சுகாதார ஸ்தாபனத்தினதும், 187 நாடுகளினதும் வழிகாட்டிக்கும், விதிமுறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் மாற்றமாக, ஜானாஸாக்களை மட்டும் எரிக்கின்றார்கள்.

மொட்டுவில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றிபெறப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சஜித் பிரேமதாஸவின், ஐக்கிய மக்கள் சக்தியின் பலத்தைக் குறைப்பதற்கும், முஸ்லிம் கட்சிகளின் பலத்தைக் குறைப்பதற்கும், முஸ்லிம்களின் கடந்தகால பிரதிநிதித்துவத்தை 21 லிருந்து வெகுவாகக் குறைப்பதற்குமே, ஒவ்வொரு தொகுதிகளிலும் முஸ்லிம் வியாபாரிகளும், பண முதலைகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, மொட்டுவினரால் சுயேச்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டு, இவர்கள் மூலம் சில ஆயிரம் முஸ்லிம்  வாக்குகளை இல்லாமலாக்கி, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைப்பதும், பெரமுன ஆசனங்களை அதிகரிப்பதுமே, இந்த மொட்டுக்காரர்களின் குறிக்கோளாகும்.

எனவே, முஸ்லிம்கள் எதிர்வரும் தேர்தலில், சிந்தித்து செயலாற்றுவதன் மூலமே, எமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கலாம்” என்றார்.

3 கருத்துரைகள்:

அஸாத் ஸாலி அவர்களின் குரல் உண்மையான 'MUSLIM VOICE'.

இம்முறை முஸ்லிம்களின் வாக்குகள் ஆத்மீக ரீதியில் ஆனதாகவே இருக்கும்.

எவரும் தம்மை எரிப்பதற்கு தாமே வாக்கு-அனுமதி கொடுப்பார்களா?  முட்டாள்கள்.

Azad Sally is a “DESCEPTIVE” and DISHONEST LYING MUSLIM POLITICIAN. In the Bathiya Mosque matter, Azad Sally made many press statements and bluffed the Batiya Mosque Jamath lock - stock and barrel, as the other “DECEPTIVE” Muslim politicians did. Nothing has happened, as “The Muslim Voice” warned the community regarding these unscrupulous Muslim politicians. Azad Sally is NOT a respectable person as his own involvement with the Police in Kandy and Colombo shows . Azad Sally was a Member of the Central Provincial Council till he resigned in March 2016. He was a UNP CPC member. Azad Sally has been a loud mouthed Muslim Politician who was very corrupt during the time when he made political alligence with the Mahinda Rajapaksa government (Haj quota scandals). One of Azad Sally's political deceptions is to make "big noises" on issues concerning the Muslim community, but nothing happens at the end, other than the Muslim community being pushed into social and political turmoil and disaster. Do the Muslims remember about the Mercesdes Benz duty free fraud purchase he made which was shown in many TV channels and the large CWE Warehouse fraud where he had rented under Rishad Bathiudeen during the Yahapalana government and NOT paid rent for many years. It is rumoured that his brother Riyaz Sally had very close connections with the Bodu Bala Sena and has revealed quite a lot of vital information of Muslim business persons, Travel Agents, Haj Group Operators and provided information about the financial status of the Muslim Community, which have become detrimental to our community in recent time, it is alleged. A New Political Force arising from within the Muslim Community, especially from among the Youth should "politically" reprimand these deceptive, dishonest and unscrupulous Muslim politician in any of the forthcoming elections, Insha Allah .These hypocritical politicians should be got rid of from our innocent community soon, Insha Allah.
Noor Nizam, Convener – “The Muslim Voice”.

ஆஸாத் ஸாலி அவர்களே, நீங்கள் அரசியல் செய்யுங்கள். ஆனால், மார்க்கம் பேச நீங்கள் தகுதியற்றவர் என்பதை முழு இலங்கையர்களும் அறிவர். சரி விடயத்துக்கு வருவோம். ஜனாஸாவை எரித்தார்கள், அதனால் வாக்குக் கொடுக்க வேண்டாம் என்கிறீர்கள்! இதற்கு ஆட்சியாளர்களைக் குறை கூறும் நீங்கள் திகன, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் முஸ்லிம்களின் உடைமைகளோடு அவர்களை உயிரோடு எரித்தார்களே! அதற்கு அப்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்பில்லையா? அல்லது அதை மறந்து விட்டீர்களா? யாருக்கும் வாக்குப் போட வேண்டாம் என்று முழுகெலும்பிலிருந்தால் சொல்லுங்கள்! சொல்வீர்களா?

Post a comment