Header Ads



சுடுகாட்டில் இளம்பெண்ணின் உடல் - காண்போரை உலுக்கும் புகைப்படத்தின் பின்னணி



இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்த அங்கன்வாடி பெண் ஊழியரின் சடலம் சுடுகாட்டில் மணிக்கணக்கில் கிடந்த புகைப்படம் வெளியாகி காண்போர் மனதை உலுக்கியுள்ளது.

அசந்தா பாத்ரா என்ற பெண், அங்கன்வாடி ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்தார்.

இதன் பின்னர் அசந்தாவின் சடலத்தை வைத்து கொண்டு அவர் கணவர் பத்ரா பட்ட வேதனை மிகப்பெரியது.

பத்ரா கூறுகையில், கடந்த வாரம் திங்கட்கிழமை அசந்தாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மாத்திரை கொடுத்தேன்.

சனிக்கிழமை அவர் உடல்நிலை மோசமடைய தொடங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்தேன்.

ஆனால் யாருமே சரியான பதிலை தரவில்லை, பின்னர் ஆட்டோவில் மருத்துவனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் மருத்துவர்கள் பார்க்கும் முன்னரே அசந்தா உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து அதே ஆட்டோவில் அவர் சடலத்தை எடுத்து கொண்டு சுடுகாட்டுக்கு வந்தேன்.

அங்கு என் உறவினர்கள், நண்பர்கள் யாருமே உதவிக்கு அழைத்தும் வரவில்லை. பின்னர் அசந்தாவின் சகோதரின்சடலத்தை சுடுகாட்டில் இருந்தபடி பார்த்து கொண்டார்.

செய்வதறியாது திகைத்த நான் அந்த சமயத்தில் சிலர் உதவியுடன் விறகுகட்டைகளை தயார் செய்து எடுத்து வந்தேன்.

இதை தொடர்ந்து மூன்று மணி நேரம் கழித்தே அதிகாரிகள் அங்கு வந்த நிலையில் என் மனைவியின் சடலம் தகனம் செய்யப்பட்டது என கூறியுள்ளார்.

சுடுகாட்டில் அசந்தாவின் சடலம் தரையில் அப்படியே வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2 comments:

Powered by Blogger.