Header Ads



உலமாக்கள், மதரஸாக்கள் இல்லாத முஸ்லிம் சமுதாயத்தை எண்ணிப்பாருங்கள்...!

மவ்லானா அஷ்ரப் அலி தானவி (ரஹ்) (19 August 1863 – 4 July 1943) அவர்கள் கூட்டமொன்றில் உரையாற்றும் போது சொன்னார்கள்:

"உலமாக்கள் உங்களிடம் தேவையானவர்கள், நாம் உதவாவிட்டால் அவர்களால் வாழ்க்கை நடத்த முடியாது என நினைக்காதீர்கள்.

இனிமேல் உலமாக்களுக்கு உதவமாட்டோம் என எல்லோரும் ஒன்று சேர்ந்து முடிவு செய்து அறிவியுங்கள்.

உலமாக்கள் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.

ஒருவர் அரிசி வியாபாரம் செய்யப்போய்விடுவார், இன்னொருவர் வேறு ஒரு பணிக்குப் போய்விடுவார்.

உலமாக்கள் இல்லாத, மக்தப், மதரஸாக்கள் இல்லாத ஒரு முஸ்லிம் சமுதாயத்தை எண்ணிப்பாருங்கள்.

ஒரு தலைமுறைக்குப் பின் உங்கள் பிள்ளைகளில் சிலர் இஸ்லாமை விட்டும் வெகுதூரம் போய் இருப்பர்கள், சிலர் வேறு மதத்திற்குக் கூடப் போயிருப்பார்கள்.

அப்பொழுது நீங்கள் உலமாக்களை அழைத்தால், அவர்கள் தங்கள் தொழிலில் ரொம்பவும் முனைப்புடன் இருப்பார்கள்."

----العلم و العلماء p56
-Kaniyur Ismail Najee Manbayee

No comments

Powered by Blogger.