Header Ads



பொதுஜனபெரமுனவின் புதிய ஆட்சியின் கீழ் 4 முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை – விஜயதாச

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் புதிய ஆட்சியின் கீழ் மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கியமைக்காக நான்கு முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவேளை அவ்வேளை அரசாங்கத்திலிருந்த நான்கு அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 முன்னைய அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்கள் மத்திய வங்கி மோசடியிலும் ஈடுபட்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் முன்னைய அரசாங்கம் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதும் நான்கு முன்னாள் அமைச்சர்களிற்கும் எதிராக விசாரணைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு தீவிரவாதிகளிற்கு அடைக்கலம் வழங்கியவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களை அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துவிட்டது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. This racist Dog should first arrest and put jail.

    ReplyDelete

Powered by Blogger.