Header Ads



ராஜபக்ச குடும்பத்தினரை ஒவ்வொரு வாரமும் கைதுசெய்ய, சம்பிக்க உள்ளிட்ட அரசியல்வாதிகள் திட்டமிட்டனர் - விஜயதாச தகவல்

2016 சுதந்திர தினத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஏனைய சிலரும் அழுத்தம் கொடுத்தனர் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார் என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வேளை ஆட்சி செய்தி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் வேறு சிலரும் மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தை முறியடிப்பதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்

2016 ஆரம்பத்தில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் இல்லத்தில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது என தெரிவித்துள்ள விஜயதாச ராஜபக்ச பொலிஸாருக்கு யோசித ராஜபக்சவை கைதுசெய்வதற்கான அழுத்தத்தை எவ்வாறு கொடுப்பது என ஆராய்வதற்காக இந்த கூட்டம் இடம்பெற்றது என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க,சம்பிக்க ரணவக்க,ராஜித சேனாரட்ண,சமன் ரட்ணபபிரிய சரத்வீரசேகர ஜேசி வெலியமுன போன்றவர்களும் முக்கிய பொலிஸ் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது சம்பிக்க ரணவக்கவும் ராஜித பெர்ணான்டோவும் பசில்,நாமல், யோசிதவிற்கு எதிரான விசாரணைகள் குறித்து விசாரணை செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகள் குறித்து இரு முன்னாள் அமைச்சர்களும் பொலிஸாரிற்கு ஆலோசனை வழங்கினார்கள் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் ஒருவரையாவது ஒவ்வொரு வாரமும் கைதுசெய்யுமாறு சம்பிக்க ரணவக்க உத்தரவிட்டார் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார் என சிலோன் டுடே குறிப்பிட்டுள்ளது.

அவ்வேளை நீதியமைச்சராக பதவி வகித்த நான் அரசியல்ரீதியில் எதிர்தரப்பினை பழிவாங்குவது சிறந்த நடவடிக்கை இல்லை என தான் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ​கொலை செய்வதைவிடவும் சமூகத்தில் குழப்பத்​தை ஏற்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்பதை அறிந்தவர்கள் இதுபோன்ற நயவஞகச் செயற்பாடுகளை மேற்கொள்ள மாட்டார்கள். நாட்டின் தற்போதைய அவரச அவசியத் தேவைகள் என்ன என்பதை இந்த காலகன்னி அரசியல் துரோகிகள் அறியாமல் செயல்படுவது மற்றொரு குழப்பத்துக்கு தூண்டப்படுகின்றது மிகவும் கவலையான விடயமாகும்.

    ReplyDelete
  2. Your great duoble game politician.

    ReplyDelete

Powered by Blogger.