Header Ads



கருணா வழங்கிய இரகசிய தகவலினாலேயே யுத்தத்தை முடித்தோம், அவர் கூறியது பாரதூரமானவையல்ல - சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

யுத்த காலத்தில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக   முன்னாள் பாராளுமன்ற  உறுப்பின கருணா அம்மான்  எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும்  பாரதூரமான விடயமல்ல. 

தமிழீழ விடுதலை புலிகள்  தொடர்பான  இரகசிய  தகவல்களை இவர் இறுதியில்  வழங்கியதன் காரணமாகவே யுத்தத்தை  விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என  அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யுத்த காலத்தில் ஆணையிறவு பகுதியில்  2000 தொடக்கம் 3000 ஆயிரம் இராணுவத்தினரை கொன்றதாக கருணா அம்மான் குறிப்பிட்ட செய்தி தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில், யுத்த  காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினால் விடுதலை புலிகள் அமைப்பினர் யுத்த களத்தில்  கொல்லப்பட்டார்கள். 

இராணுவத்தினருக்ககு எதிராகவும் புலிகள் அமைப்பு  பல்வேறு   வழிமுறைகள் ஊடாக  தாக்குதல்களை முன்னெடுத்தார்கள்.  யுத்த காலத்தில் கருணா அம்மான்   கிழக்கு  மாகாண படைத்தளபதி பொறுப்பாளராக செயற்பட்டார். இதன் போதே இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

கருணா  அம்மான் விடுதலை புலிகள்  அமைப்பில் இருந்து விலகி இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார் இதன் பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. 

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில்  இவர்  பல்வேறு  இரகசிய தகவல்களை அரசாங்கத்தற்கு வழங்கினார். இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இறுதிக்கட்ட யுத்தம்  குறுகிய காலத்தில் நிறைவுக் கு கொண்டு வரப்பட்டது.

ஆகவே தற்போது  இவர்  குறிப்பிட்டுள்ள கருத்து   இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

இவ்வாறான  கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தை  மிக விரைவில் நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால். இவரது உதவியை அப்போது பெற்றுக் கொண்டோம்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் பாரிய இழப்புக்கள்  ஏற்பட்டுள்ளன.  யுத்தத்தை நோக்கி  பயணிக்கையில் இழப்புக்களை  நிச்சயித்துக் கொள்ளவேண்டும் என்பது இராணுவத்தினருக்கு  சாதாரண ஒரு விடயமாகும்.  30  வருட யுத்தத்தை  நிறைவுக்கு கொண்டு  வந்ததன் காரணமாகவே  இன்று  தமிழ்முஸ்லிம்  மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றார்.

3 comments:

  1. இதற்கு அனுர குமார அவர்களின் பதில் என்ன? கருணா என்ற பயங்கரவாதி அன்று படை வீரர்களை கொன்றது மட்டுமன்றி அருந்தலாவையில் பிக்குகள்,தலதாமாளிகையில் பக்தர்கள், கிழக்கில் பள்ளிகளில், வயல்களில்,வீடுகளில் உறக்கத்தில், வீதிகளில் பயணத்தில் என ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது மட்டுமன்றி தமிழினத்தையே காட்டிக் கொடுத்தவன் என்று தமிழர்களால் பிரகடனப் படுத்தப்பட்டவன்.
    மட்டக்களப்பு மக்களால் ஒதுக்கப்பட்டதால் தற்போது அம்பாறையில் களம்் இறங்கியுள்ளான். ஆனால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அமோக ஆதரவை வழங்க காத்திருக்கிறார்கள். இதனால் கோடீஸ்வர்ர்கள் கதிகலங்கிப் போயுமுள்ளனர் என மட்டக்களப்பில் பேசப்படுகிறது.

    ReplyDelete
  2. புலிகளைக் காட்டிக் கொடுத்த விடயத்தை சரத் வீரசேகர உறுதிப்படுத்தியுள்ளதால் தமிழ் மக்கள் புள்ளடி வைப்பார்களா? இல்லையென்றால் ஆப்பு வைப்பார்களோ தெரியாது.

    ReplyDelete
  3. இந்த அரசாங்கம் ஒருபோதும் கருனாவை தண்டிக்காது. ஏனெனில் இந்த அரசாங்கத்துக்கு தேவையான போது கொலைகளையும் தற்கொலைகளையும் செய்வது அவன்தானே.

    ReplyDelete

Powered by Blogger.